இப்பம் கொஞ்சம் அடி கம்மிதான்.. வோடாபோன் ஐடியா நஷ்டம் ரூ.4,532 கோடி..

 

இப்பம் கொஞ்சம் அடி கம்மிதான்.. வோடாபோன் ஐடியா நஷ்டம் ரூ.4,532 கோடி..

வோடாபோன் ஐடியா நிறுவனம் 2020 டிசம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் ரூ.4,532.40 கோடியை நஷ்டமாக சந்தித்துள்ளது.
நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றான வோடாபோன் ஐடியா தனது கடந்த டிசம்பர் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. வோடாபோன் ஐடியா நிறுவனம் 2020 டிசம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் ரூ.4,532.40 கோடியை நஷ்டமாக சந்தித்துள்ளது. இருப்பினும் இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் மிகவும் குறைவாகும். 2020 செப்டம்பர் காலாண்டில் வோடாபோன் ஐடியா நிறுவனத்துக்கு ரூ.7,218.2 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருந்தது.

இப்பம் கொஞ்சம் அடி கம்மிதான்.. வோடாபோன் ஐடியா நஷ்டம் ரூ.4,532 கோடி..
வோடாபோன் ஐடியா

2020 டிசம்பர் காலாண்டில் வோடாபோன் ஐடியா நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.10,894.1 கோடியாக உயர்ந்துள்ளது. இது 2020 செப்டம்பர் காலாண்டைக் காட்டிலும் 1 சதவீதம் அதிகமாகும். கடந்த டிசம்பர் காலாண்டில் வோடாபோன் ஐடியா நிறுவனத்தின் ஒரு பயனாளர் வாயிலான சராசரி வருவாய் ரூ.121ஆக உயர்ந்துள்ளது. இது 2020 செப்டம்பர் காலாண்டில் ரூ.109ஆக இருந்தது.

இப்பம் கொஞ்சம் அடி கம்மிதான்.. வோடாபோன் ஐடியா நஷ்டம் ரூ.4,532 கோடி..
வோடாபோன் ஐடியா

2020 டிசம்பர் காலாண்டில் வோடாபோன் ஐடியா நிறுவனத்தின் செயல்பாட்டு செலவினம் ரூ.6,607.9 கோடியாக குறைந்துள்ளது. கடந்த டிசம்பர் காலாண்டில் வோடாபோன் ஐடி யா நிறுவனத்தின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 26.98 கோடியாக குறைந்துள்ளது. 2020 டிசம்பர் காலாண்டில் 30.40 கோடி பேர் இந்நிறுவனத்தின் இணைப்பை பெற்று இருந்தனர்.