துறவறம் பூண்டார் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் கொள்ளு பேரன் !

 

துறவறம் பூண்டார் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் கொள்ளு பேரன் !

செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் கொள்ளு பேரன் இன்று திருவாடுதுறை ஆதீனத்தில் துறவறம் பூண்டார். திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதினத் திருமடத்தில் சிவசங்கரன் என்கிற அடியாருக்குக் கல்லாடை கொடுத்து வேலப்ப சுவாமிகள் என்ற திருப்பெயரிட்டு ஆதினத் திருக்கூட்டத்தில் சேர்க்கப்பட்டார்.

துறவறம் பூண்டார் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் கொள்ளு பேரன் !

செக்கிழுத்த செம்மல், கப்ப லோட்டிய தமிழன் என்று போற்றப்படும் சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு 4 மகன்கள், 4 மகள்கள் இருந்தனர். அவர்கள் அனைவருமே இறந்துவிட்டனர். ஆனால் வ.உ.சியின் பேரப்பிள்ளைகளும், கொள்ளு பேரப் பிள்ளைகளும் உள்ளனர். அவர்களில் ஒருவரான சிவசங்கரன் துறவறம் பூண்டார். செல்வ செழிப்பில் வாழ்ந்த சிதம்பரம் பிள்ளை, ஆங்கில ஆட்சியை அகற்றுவதற்காக வீரம் செறிந்த போராட்டம் நடத்தினார். தலைசிறந்த வழக்கறிஞரான வ.உ.சி. தொழிலாளர்கள் உரிமைக்காக போராடியதோடு, அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட காலத்தில் அவர்களுடைய பசியைப் போக்குவதற்காக தன்னுடைய சொந்தப் பணத்தைச் செலவழித்தார் என்பது குறிப்பிடதக்கது.