விடுதலையானார் சசிகலா!

 

விடுதலையானார் சசிகலா!

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து சசிகலா விடுதலையாகியுள்ளார்.

சொத்துகுவிப்பு வழக்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா கடந்த 4 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வந்தார். அதேபோல் அவருக்கு ரூ.10.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.

விடுதலையானார் சசிகலா!

இதை தொடர்ந்து சசிகலா சிறை தண்டனை முடிந்து வரும் 27 ஆம் தேதி இன்று விடுதலையாவார் என்று சிறைத்துறை அறிவித்தது. அதற்குள் அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல்நிலை சீராக உள்ள நிலையில் திட்டமிட்டபடி அவர் விடுதலையாவாரா? என்று சந்தேகம் இருந்தது.

விடுதலையானார் சசிகலா!

இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வந்த சசிகலா விடுதலையானார். சசிகலாவிடம் விடுதலை தொடர்பான ஆவணங்களை மருத்துவமனையில் சிறைத்துறை ஒப்படைத்தது. சசிகலா சிகிச்சை பெற்று வரும் விக்டோரியா மருத்துவமனையில் தினகரன், வழக்கறிஞர் ராஜ செந்தூர் பாண்டியன் உள்ளனர். முன்னதாக சிறைத்துறை கண்காணிப்பாளர் லதா தலைமையிலான குழு மருத்துவமனைக்கு சென்று ஆவணங்களில் சசிகலாவின் கையொப்பம் பெற்று பின் அதற்கான நகலை மருத்துவமனை நிர்வாகத்திடமும் அளித்தனர்.