ஆகஸ்ட் 14ல் சசிகலா விடுதலையா? மறுக்கும் கர்நாடக சிறைத்துறை

ஆகஸ்ட் 14ல் சசிகலா விடுதலையா? மறுக்கும் கர்நாடக சிறைத்துறை
ஆகஸ்ட் 14ம் தேதி சசிகலா விடுதலையாவார் என்று பா.ஜ.க நிர்வாகி கூறியதற்கு கர்நாடக சிறைத்துறை வட்டாரங்கள் மறுப்பு தெரிவிக்கின்றன.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டு நான்கு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 2017ம் ஆண்டு சசிகலா சிறைக்கு சென்றார். நன் நடத்தை, விடுமுறை உள்ளிட்டவற்றைக் கணக்கில் கொண்டு அவர் செப்டம்பர் மாதம் விடுதலையாக வாய்ப்புள்ளது என்று செய்தி வெளியானது.

இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகி ஆசிர்வாதம் ஆச்சாரி தன்னுடைய சமூக ஊடகபதிவில் ஆகஸ்ட் 14ம் தேதி சசிகலா விடுதலையாக வாய்ப்பு உள்ளதாக பதிவிட்டார். இதைத் தொடர்ந்து சசிகலா ஆகஸ்ட் 14ம் தேதி விடுதலையாக உள்ளதாக சிறைத்துறை நிர்வாகமே உறுதி செய்தது போன்று அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட்டன.

http://


இது உண்மையா என்று கர்நாடக சிறைத்துறையைத் தொடர்புகொண்டு கேட்டபோது அது பற்றி கருத்து கூற மறுத்துவிட்டனர். அதே நேரத்தில் சசிகலா விடுதலை தொடர்பாக எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை. ஆகஸ்ட் 14ம் தேதி விடுதலையாகிறார் என்று வெளியான தகவல் உண்மையில்லை என்று சிறைத்துறை வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். ஆகஸ்ட் இறுதி, செப்டம்பர் மாதத்தில் சசிகலா விடுதலை இருக்கும் என்று கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை

Most Popular

தொடர்ந்து 2வது நாளாக சரிவை சந்தித்த பங்கு வர்த்தகம்… ஆனால் முதலீட்டாளர்களுக்கு ரூ. 74 ஆயிரம் கோடி லாபம்

இன்று காலையில் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. இருப்பினும் ஏற்றம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. சில மணி நேரத்தில் பிறகு பங்கு வர்த்தகம் சரிவு காண தொடங்கியது. கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், கெயில்...

“நாங்க யூத்து ,நீ பழைய டெலிபோன் பூத்து “குடிக்காதே என்ற பெரியவரை குடிபோதையில் திட்டி கொலை செய்த இளைஞர்கள் .

ஒரு முதியவரின் வீட்டு வாசலில் தண்ணியடித்து விட்டு ,தம் அடித்த இரு வாலிபர்களை தட்டிக்கேட்ட முதியவரை, அங்கேயே அடித்து இரண்டு வாலிபர்கள் கொலை செய்த சம்பவத்தால் அந்த பகுதியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர் . சத்தீஸ்கரில் ராய்ப்பூரில்...

“கட்டுக்குள் வந்த கொரோனா” மலைக்கவைக்கும் தமிழக அரசின் அதிரடி நடவடிக்கைகள்!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பு இந்தியாவில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த வகையில் தமிழகமும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியது. ஆரம்ப கட்டத்தில் பாதிப்பு குறைவாகவே இருந்த நிலையில், ஒரு சில...

“டேய் தகப்பா பெத்த பொண்ணுங்கள ஆபாசமா திட்டாதே” -குடிகார தந்தையின் டார்ச்சரால் ,மகள்கள் அவரை என்ன பண்ணாங்க தெரியுமா ?

தெலுங்கானாவின் ஹைதராபாத்தின் ஜகத்கிரிகுட்டா பகுதியில் ராஜு என்ற 45 வயது நபருக்கு 17 வயது மற்றும் 16 வயதில் இரண்டு மகள்கள் உள்ளார்கள்.அவரின் மனைவி எட்டு மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார் .அதற்கு...
Do NOT follow this link or you will be banned from the site!