கோவில்பட்டியில் சசிகலா : தொடரும் ஆன்மீக பயணம்!

 

கோவில்பட்டியில் சசிகலா :  தொடரும் ஆன்மீக பயணம்!

கடந்த 4 ஆண்டுகளாக சசிகலா சொத்துகுவிப்பு வழக்கில் சிறையில் இருந்த நிலையில் ஜனவரி 27 ஆம் தேதி விடுதலையானார். இதனிடையே கொரோனா தொற்று காரணமாக சசிகலா சிகிச்சை பெற்று வந்த
நிலையில் குணமாகி கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி சென்னை வந்தடைந்தார். இதையடுத்து சசிகலா வருகை அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்த்த நிலையில் கடந்த மார்ச் 3ஆம் தேதி அரசியலில் இருந்து ஒதுங்குகிறேன் என்று சசிகலா வெளியிட்ட அறிவிப்பு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

கோவில்பட்டியில் சசிகலா :  தொடரும் ஆன்மீக பயணம்!

தீவிர அரசியலில் ஈடுபடவுள்ளேன்; மக்களை விரைவில் சந்திப்பேன் என்று கூறிய சசிகலா திடீரென தான் அரசியலில் இருந்து ஒதுங்குகிறேன்; அதிமுக வெற்றிக்கு தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்று அறிவித்தது நெருக்கடி காரணமாக தான் என்று கூறப்பட்டது. ஆனால் அரசியலில் நீர்த்துப்போய்விடக் கூடாது என்பதாலும், அமமுகவுக்கு ஆதரவாக வாக்களிக்க சொன்னால் அது அதிமுகவுக்கு எதிரானதாக மாறிவிடும் என்று எண்ணிய சசிகலா இந்தத் தேர்தலில் அமைதியாக இருக்க முடிவெடுத்தே ஒதுங்கியுள்ளார் என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

கோவில்பட்டியில் சசிகலா :  தொடரும் ஆன்மீக பயணம்!

இந்நிலையில், அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ள சசிகலா ஆன்மீக பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த மார்ச் 15 முதல் தமிழகத்தில் இருக்கும் பல்வேறு கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்து வரும் சசிகலா இன்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி செண்பகவல்லி ஆலயத்தில் வழிபாடு செய்தார். முன்னதாக திநகர் அகஸ்தியர் கோயில், ராமேஸ்வரம், நாகூர்,தியாகராஜர் சுவாமி கோயில் உள்ளிட்ட பல ஆலயங்களில் சாமி தரிசனம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.