மறைந்த பின்னரும் சாதனை படைத்த வி.ஜே சித்ரா

 

மறைந்த பின்னரும் சாதனை படைத்த வி.ஜே சித்ரா

மறைந்த நடிகை வி.ஜே சித்ராவின் ட்ரெய்லர் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

Image

சின்னத்திரை மூலம் தமிழ் மக்களின் உள்ளங்களில் நீங்கா இடம் பிடித்தவர் வி.ஜே சித்ரா. மக்கள் தொலைக்காட்சியில் விஜேவாக பணியை தொடங்கி பல்வேறு சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று இறுதியாக பாண்டியன் ஸ்டோர் சீரியலின் மூலம் பிரபலமானவர் இவரின் திடீர் தற்கொலை முடிவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் நடிகை சித்ரா நடித்த முதல் திரைப்படமான கால்ஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். அப்படத்தில் நடிகை சித்ரா முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் கடந்த 4 தினங்களுக்கு முன் வெளியானது. வெளியான 48 நாட்களில் இந்த ட்ரெய்லர் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தற்போது 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனையை படைத்துள்ளது. மேலும் யூடியூபில் ட்ரெண்டிங்கிலும் உள்ளது. ஜெ.சபரிஷ் இயக்கியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வர தயாராகவுள்ளது. தமீம் அன்சாரி இசையமைத்திருக்கும் கால்ஸ் படத்தில் வினோதினி, நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ட்ரெய்லரை பார்க்க சித்ரா இல்லையே என அவரது ரசிகர்கள் தங்களது சோகத்தை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்திவருகின்றனர்.