‘சிம்ப்ளி வேஸ்ட் பாலா.. நமுத்து போன பட்டாசு சனம்’ அனல் பறக்கும் பிக் பாஸ் ஹவுஸ்!

 

‘சிம்ப்ளி வேஸ்ட் பாலா.. நமுத்து போன பட்டாசு சனம்’ அனல் பறக்கும் பிக் பாஸ் ஹவுஸ்!

பிக் பாஸ் சீசன் 4ன் இன்றைய நிகழ்ச்சிக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 4, கடந்த சீசன்களை விட மாறுபட்டு இருக்கிறது. அதாவது ஆரம்பக்கட்டத்திலேயே சண்டை, கேமரா கான்ஷியஸ், கேம் வியூகம், மாறுபட்ட கருத்து என பெரும் பரபரப்பாக இருந்து வருகிறது சீசன் 4. இதில் பங்கேற்றிருக்கும் 15 போட்டியாளர்களும் சுரேஷ் சக்கரவர்த்தியுடன் மோதலில் ஈடுபட, தன்னை எல்லாரும் கார்னர் செய்வதாக அவர் கேமரா முன் கூறியிருந்தார்.

‘சிம்ப்ளி வேஸ்ட் பாலா.. நமுத்து போன பட்டாசு சனம்’ அனல் பறக்கும் பிக் பாஸ் ஹவுஸ்!

இந்த நிலையில் தான் 17ஆவது போட்டியாளராக விஜே அர்ச்சனா எண்ட்ரி கொடுத்தார். வீட்டுக்குள் சென்ற உடனேயே, சுரேஷ் சக்கரவர்த்தியை வச்சு செய்து விட்டார் அர்ச்சனா. 1 வாரத்துக்கு மேல் வெளியே இருந்து பார்த்ததால், ஒருவாரு ஹவுஸ் மேட்ஸ் அனைவரையும் ஊகித்து வைத்திருக்கும் அர்ச்சனாவுக்கு பிக் பாஸ் ஒரு டாஸ்க் கொடுத்திருக்கிறார். அந்த டாஸ்க்கில் அர்ச்சனா ஹவுஸ் மேட்ஸ்க்கு பெயர் வைக்கும் விதமாக தற்போது 3ஆவது புரோமோ வெளியாகியுள்ளது.

‘சிம்ப்ளி வேஸ்ட் பாலா.. நமுத்து போன பட்டாசு சனம்’ அனல் பறக்கும் பிக் பாஸ் ஹவுஸ்!

அதில், நோ கமெண்ட்ஸ் சிம்ப்ளி வேஸ்ட் என பாலாவிற்கும், அட்மாஸ்பியர் ஆர்டிஸ்ட் என ஷிவானிக்கும், நமுத்து போன பட்டாசு என சனத்துக்கும் டேக் கொடுக்கிறார் அர்ச்சனா. இதனை கண்டு சோம் சேகர் உள்ளிட்டோர் அதிர்ச்சி அடைவது போல புரோமோ முடிகிறது. பரபரப்புடனே இருக்கும் பிக் பாஸ் 4ன் இன்றைய நிகழ்ச்சி அனல் பறக்கும் விதமாக இருக்கப் போகிறது என்பதில் சந்தேகமே இல்லை.