பணியாளர்கள் மாஸ்க் போடாததால் ஜவுளிக் கடைக்கு சீல் வைத்த ஆட்சியர்!

 

பணியாளர்கள் மாஸ்க் போடாததால் ஜவுளிக் கடைக்கு சீல் வைத்த ஆட்சியர்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வரும் நிலையிலும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு கடைகள் செயல்பட அனுமதி அளித்தது. அனுமதி அளிக்கப்பட்ட கடைகள் உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்றுமாறும் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் திடீரென ஆய்வு மேற்கொண்ட திருச்சி மாவட்ட ஆட்சியர் மாஸ்க் போடாமல் இருந்த கடைக்கு சீல் வைத்துள்ளார்.

பணியாளர்கள் மாஸ்க் போடாததால் ஜவுளிக் கடைக்கு சீல் வைத்த ஆட்சியர்!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சிப் பகுதியில் அம்மாவட்ட ஆட்சியர் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, வீதிகளில் செயல்பட்டு வந்த ஓட்டல்கள் மற்றும் மளிகைக் கடைகள், ஜவுளிக் கடைகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பின்பற்றப்படுகிறதா என்று ஆய்வு செய்தார். அந்த சமயம் கூட்ரோட்டில் செயல்பட்டு வந்த ஜவுளிக் கடை ஒன்றில் பணியாளர்கள் மாஸ்க் போடாமல் வியாபாரம் செய்துள்ளனர். இதனை பார்த்த ஆட்சியர் ஒரு வாரத்துக்கு அந்த கடைக்கு சீல் வைத்து அதிரடியாக உத்தரவிட்டார்.