‘விவோ இசட்5எக்ஸ்’ (2020) – ஸ்னாப்டிராகன் 712 பிராசஸருடன் அறிமுகம்

 

‘விவோ இசட்5எக்ஸ்’ (2020) – ஸ்னாப்டிராகன் 712 பிராசஸருடன் அறிமுகம்

டெல்லி: ‘விவோ இசட்5எக்ஸ்’ (2020) ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 712 பிராசஸருடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

‘விவோ இசட்5எக்ஸ்’ (2020) ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 712 பிராசஸருடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக விவோ இசட்5எக்ஸ் பழைய மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர் இடம்பெற்று இருந்தது. இந்த முக்கிய அப்டேட் வேறு எந்த மாற்றங்களும் புதிய மாடலில் மேற்கொள்ளப்படவில்லை. மூன்று ரியர் கேமரா, ஹோல்-பன்ச் டிசைன், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி ஆகியவை விவோ இசட்5எக்ஸ் ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சங்கள் ஆகும்.

‘விவோ இசட்5எக்ஸ்’ (2020) சாதனத்தின் விலை 1398 சீன யுவான் (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.15 ஆயிரம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அரோரா, ஃபேண்டம் பிளாக், சிம்பொனி ஆகிய நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் கிடைக்கிறது. 16 எம்.பி ரியர் கேமரா மற்றும் செல்பி கேமரா இடம்பெற்றுள்ளது. மற்ற இதர கனெக்டிவிட்டி அம்சங்கள் மற்றும் விரல்ரேகை சென்சார் இடம்பிடித்துள்ளன. இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்.ஏ.எச் பேட்டரி திறன் இடம்பெற்றுள்ளது.