”ஒய்30 போனின் விலையில் ரூ.1000 தள்ளுபடி – விவோ அதிரடி”

 

”ஒய்30 போனின் விலையில் ரூ.1000 தள்ளுபடி – விவோ அதிரடி”

விவோ போன் பிரியரா? அப்போ இந்த செய்தி உங்களுக்குத்தான். விவோ ஒய்30 போனின் விலையை ஆயிரம் ரூபாய் அந்நிறுவனம் குறைத்துள்ளது.

”ஒய்30 போனின் விலையில் ரூ.1000 தள்ளுபடி – விவோ அதிரடி”

விவோ ஒய்30 போன், 6.4 இன்ச் எச்டி திரை, இரண்டு சிம் கார்டு இணைப்பு வசதி, ஆண்டிராய்ட் 10 இயங்குதளம், 4 ஜிபி ரேம், 5000 எம்ஏஎச் பேட்டரி, டைப் சி யுஎஸ்பி இணைப்பு, 128 ஜிபி மெமரி, எஸ்டி கார்டு மூலமாக 256 ஜிபி வரை மெமரி நீட்டித்துக்கொள்ளும் வசதி என சகல வசதிகளையும் கொண்டது. மேலும் பின்புறத்தில் 13 மெகா பிக்சல் கேமரா மற்றும் 8 மெகா பிக்சல் செகண்டரி கேமராவுடன் 2 மெகா பிக்சல் டெப்த் கேமரா லென்ஸ் மற்றும் 2 எம்பி ஷூட்டர் என மொத்தம் நான்கு வகை கேமராக்களையும், முன்புறத்தில் 8 மெகா பிக்சல் செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது.

”ஒய்30 போனின் விலையில் ரூ.1000 தள்ளுபடி – விவோ அதிரடி”

இந்த போன் அறிமுகமாகும் போது, 14 ஆயிரத்து 990 ரூபாய்க்கு அறிமுகமான நிலையில், பண்டிகை காலத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களை கவர, இந்த போனின் விலையை ஆயிரம் ரூபாய் குறைத்து 13,990 ஆக குறைத்துள்ளது. இந்த விலை குறைப்பு விவோ நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் அமேசான் ஸ்டோரிலும் எதிரொலிப்பதை காண முடிகிறது. விரைவில் அனைத்து இடங்களிலும் இந்த போனின் விலை குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • எஸ். முத்துக்குமார்