விவோ 42 எம்பி செல்பி டூயல் கேமரா வி20 ப்ரோ- டிசம்பர் 2ல் அறிமுகம்

 

விவோ 42 எம்பி செல்பி டூயல் கேமரா வி20 ப்ரோ- டிசம்பர் 2ல் அறிமுகம்

விவோ நிறுவனம் 42 எம்பி, செல்பி டூயல் கேமரா வசதி கொண்ட வி20 ப்ரோ ஸ்மாட்போனை அடுத்தமாதம் 2 ஆம் தேதி வெளியிட உள்ளது. இது தொடர்பான தகவலை விவோ நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. விவோ வி20 வரிசையில் அதிகபட்ச வசதிகள் கொண்ட மாடலாக வி20 ப்ரோ இருக்கும் என்றும், வி20 மற்றும் வி20 SE, மாடலை விட மேம்பட்டதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. ஆன்லைன் வழியாக நடக்க உள்ள நிகழ்ச்சியில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. விவோ இணையதளம் மூலம், இந்த போனுக்கு முன்பதிவு செய்யவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் ஆன்லைன் ஸ்டோர் மூலமும் விற்பனைக்கு வருகிறது.

விவோ 42 எம்பி செல்பி டூயல் கேமரா வி20 ப்ரோ- டிசம்பர் 2ல் அறிமுகம்

குவால்காம் ஸ்நாப்டிராகன் 765ஜி ஆக்டோ-கோர் பிராசஸருடம் , 5 ஜி சேவைக்கு ஏற்ப அப்டேட் செய்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 6.44 இன்ச் தொடுதிரை, ஃபுல் ஹெச்டி அமோல்டு டிஸ்பிளே கொண்டிருக்கும். 8 ஜிபி ராம், 128 ஜிபி நினைவக வசதி கொண்டுள்ளது. 33வாட்ஸ் பார்ட்ஸ் சார்ஜிங் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. விவோ ஃபன்டெக் இயங்குதளம், ஆண்ட்ராய்டு 10 அப்டேட் செயலியில் இயங்கும். யுஎஸ்பி டைட் சி போர்ட் , 5ஜி, 4ஜி எல்டிஇ நெட்வொர்க் வசதிகள் இயங்கும்.

விவோ 42 எம்பி செல்பி டூயல் கேமரா வி20 ப்ரோ- டிசம்பர் 2ல் அறிமுகம்

7.39 மி.மீ தடிமன் கொண்டுள்ளதால், இந்த போன் மிக மெல்லிய வடிவமாக இருக்கும். முன்புற கேமரா 8 எம்பி சென்சாருடன்,44 எம்பி டூயல் கேமரா கொண்டுள்ளது. இரண்டு கலர் வேரியண்ட்களில் மிட்நைட்ஜாஸ் மற்றும் சன்செட் மெலோடி என 2 வண்ணங்களில் வெளிடுகிறது. இதன் விலை விவரங்கள் வெளியிடப்படவில்லை எனினும், விவோ வி20 இந்தியாவில் ரூ.24,990 என விற்பனையாவதால், அதைவிடவும் சற்று விலை அதிகமாக விவோ வி20 ப்ரோ இருக்கும் என விவோ போன் ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.