ஐபிஎல் வரலாற்றில் முதல் முறை… வரவேற்கும் பிசிசிஐ… விலகிச் செல்லும் விவோ!

 

ஐபிஎல் வரலாற்றில் முதல் முறை… வரவேற்கும் பிசிசிஐ… விலகிச் செல்லும் விவோ!

ஒவ்வொரு ஐபிஎல் ஏலம் நடைபெறுவதற்கு முன்னரும் பிசிசிஐ அந்த சீசனுக்கான ஸ்பான்சரை எப்படியாவது தேடிப்பிடித்து டீல் பேசிவிடும். ஏலத்தின்போதே மார்க்கெட்டிங் வேலையில் இறங்கிவிடும் ஸ்பான்ஸர் நிறுவனங்கள். ஆனால், இந்தாண்டு பிப்ரவரி 18இல் சென்னையில் நடைபெறவிருக்கும் மினி ஏலத்திற்கான ஸ்பான்ஸர் யார் என்ற விவரம் சஸ்பென்ஸாகவே உள்ளது. வழக்கத்தை விட இந்தாண்டு அதிக லாபத்தை பிசிசிஐ எதிர்பார்ப்பதால் தான் இந்த இழுபறி என்று கூறப்படுகிறது.

ஐபிஎல் வரலாற்றில் முதல் முறை… வரவேற்கும் பிசிசிஐ… விலகிச் செல்லும் விவோ!

2018ஆம் ஆண்டு சீன நிறுவனமான விவோவுடன் 2,199 கோடிக்கு டீல் பேசி, ஐந்தாண்டு ஸ்பான்ஸர்சிப் ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தம் 2022ஆம் ஆண்டு முடிவடையும் என்று கூறப்பட்டது. ஆனால் கடந்தாண்டு இந்திய-சீன எல்லையில் பதற்றம் நிலவியதால், சீன நிறுவனத்துடன் பிசிசிஐ ஒப்பந்தம் மேற்கொள்ளக் கூடாது என்ற அழுத்தம் உருவானது. ஆரம்பத்தில் பிசிசிஐ இதை மறுத்தாலும், விவோ தாமாகவே ஒப்பந்தத்திலிருந்து விலகிக் கொண்டது. கடைசி நேரத்தில் ஸ்போர்ட்ஸ் பேன்டஸி நிறுவனமான ட்ரிம் 11க்கு 222 கோடிக்கு அந்த ஒப்பந்தம் கைமாறியது.

ஐபிஎல் வரலாற்றில் முதல் முறை… வரவேற்கும் பிசிசிஐ… விலகிச் செல்லும் விவோ!

இந்தத் தொகை பிசிசிஐக்கு போதாமல் இருந்தாலும், கடைசி நேரத்தில் வேறு வழியில்லாமல்ட் ட்ரிம் 11 உடன் ஒப்பந்தம் செய்தது. 2018ஆம் ஆண்டே விவோ 363 கோடி கொடுத்திருந்தது. 2019இல் 400 கோடியாக அதிகரித்தது கவனித்தக்கது. அதனால் நிச்சயம் பிசிசிஐ 500 கோடிக்கு மேல் ஸ்பான்ஸர்சிப் எதிர்பார்க்கும். விவோ நிறுவனம் மீண்டும் ஒப்பந்தைத் தொடருமா என்பது சந்தேகமாகவே உள்ளது. அந்நிறுவனம் ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ளும் என்றே தகவல்கள் கூறுகின்றன. அல்லது அதே தொகைக்கு ஒப்பந்தம் செய்துகொள்ள எந்த நிறுவனமாவது முன்வந்தால் கைமாற்றிவிட வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

ஐபிஎல் வரலாற்றில் முதல் முறை… வரவேற்கும் பிசிசிஐ… விலகிச் செல்லும் விவோ!

ஆனால், விவோ மீண்டும் வந்தால் நாங்கள் முழு மனதுடன் வரவேற்கிறோம் என்று பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது. பிசிசிஐ அழைத்தாலும் விவோ பின்வாங்கும் அல்லது கைமாற்றி விடும் முடிவில் தெளிவாக இருப்பதாக விஷயம் அறிந்தவகள் கூறுகிறார்கள்.