ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஸ்பான்சரில் இருந்து விலகும் விவோ நிறுவனம்?

 

ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஸ்பான்சரில் இருந்து விலகும் விவோ நிறுவனம்?

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விலக சீனாவின் விவோ நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரிலும், சீன நிறுவனத்துடனான ஒப்பந்தம் தொடரும் என ஐபிஎல் ஆட்சிமன்ற குழு கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவு செய்தது. லடாக் எல்லைப் பிரச்னையைத் தொடர்ந்து சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என இந்தியாவில் பல்வேறு குரல்கள் எழுந்த நிலையில், ஐபிஎல் நிர்வாகத்தின் முடிவுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஸ்பான்சரில் இருந்து விலகும் விவோ நிறுவனம்?

சமூக வலைதளங்களில் சீனாவைச் சேர்ந்த செல்போன் தயாரிப்பு நிறுவனமாக விவோவுக்கு எதிரான கருத்துகள் அதிகம் பகிரப்பட்ட நிலையில், இந்த ஆண்டு மட்டும் ஐபிஎல் ஸ்பான்சரில் இருந்து விலக அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விளம்பர ஒப்பந்தமாக விவோ நிறுவனம் ஆண்டிற்கு 440 கோடி ரூபாய் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு 2022ஆம் ஆண்டு வரை அளிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.