பிஜேபிக்கு எதிரான விவேகானந்தர் … #vivekanandaAgainstBjp

 

பிஜேபிக்கு எதிரான விவேகானந்தர் … #vivekanandaAgainstBjp

விவேகானந்தர் 158வது பிறந்தநாளில் இன்று பிஜேபிக்கு எதிராக விவேகானந்தர் சொன்ன கருத்துக்களை பதிவிட்டு, #vivekanandaAgainstBjp என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

பிஜேபிக்கு எதிரான விவேகானந்தர் … #vivekanandaAgainstBjp

பிராமணர்கள் அல்லாதவர்கள் தாழ்ந்தவர்கள், தீயவர்கள் என்று பிராமணர்கள் புனையப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களது கருத்தியல் மற்றும் கையாளுதல் பிராமணர்களை மீண்டும் வலியுறுத்தினர், அவர்கள் உண்மையிலேயே அப்படிப்பட்டவர்கள் என்று நம்புகிறார்கள்.- விவேகானந்தர்

பிஜேபிக்கு எதிரான விவேகானந்தர் … #vivekanandaAgainstBjp

பூரி ஜகந்நாத் கோயில் ஒரு பழைய புத்த கோவில். அத்தகைய கோயில்களை நாங்கள் இந்து கோவில்களாக மாற்றினோம். – விவேகானந்தர்

பிஜேபிக்கு எதிரான விவேகானந்தர் … #vivekanandaAgainstBjp

சாதிகளுக்கு இடையே சமத்துவம் நிலவ, கல்வி அறிவு மற்றும் கலாச்சாரம் இரண்டையும் எல்லோருக்கும் பொதுவானதாக செய்துவிட வேண்டும். – விவேகானந்தர்

பிராமணன் கொலை செய்தால் கூட அவனை புகழ வேண்டும். பிராமணன் அல்லாதார் ஒரு பழத்தை திருடினாலும் அவனை தூக்கில் இட வேண்டும். இதுதான் மனுவின் கொடுமை என்று மனுசாந்திர கொடுமைகளை விவேகானந்த விளக்குவதையும்,

தாழ்ந்தவர்களை தொட்டால் தீட்டு, சேர்ந்து உட்கார்ந்தால் தீட்டு என்பதால் மனிதனாகப் பிறந்த ஒருவர் எவ்வளவு தாழ்ந்த நிலையை அடைய முடியுமோ அந்த கடைசி படிக்கு வந்துவிட்டனர் என்றும், மூட நம்பிக்கைகளை உடைய முட்டாள்களாக இருப்பதை விட நீங்கள் நாத்திகர்களாக இருப்பதையே நான்விரும்புகிறேன்.. என்றும்,

புத்தருடைய துறவு கொள்கையை இந்து சமயம் களவாடி கொண்டது. புத்தரை போன்ற துறவு வாழ்க்கையுடைய வேறு ஒரு மனிதன் இவ்வுலகத்தில் பிறக்கவில்லை என்றும் விவேகானந்தர் சொன்னவற்றை எல்லாம் பதிவிட்டுவருகின்றனர் நெட்டிசன்கள்.

மேலும், ஆன்மீகத்தை காரணம் காட்டி திமுகவை வீழ்த்தலாமென்று சிலர் நினைக்கிறார்கள். மக்களுக்கு சேவை ஆற்றுவதே மகத்தான ஆன்மீகமென்றார் சுவாமி விவேகானந்தர். மனத்தூய்மை -பிறருக்கு நன்மை செய்வது; இதுவே எல்லா வழிபாடுகளின் சாரம் -ஏழைகள், பலவீனமானவர்கள்,நோயுற்றவர்களை காப்பவனே உண்மையில் இறைவனை வழிபடுகிறவன் என்றார் அவர் என திமுக தலைவர் ஸ்டால்ன் சொன்னதையும் ஷேர் செய்து , #vivekanandaAgainstBjp என்ற ஹேஷ்டேக்கினை ஷேர் செய்து வருகின்றனர்.