• February
    17
    Monday

தற்போதைய செய்திகள்

Main Area

Vivek Oberoi
படு தோல்வி மட்டுமல்ல டெபாசிட்டையும் இழந்த மோடி...

பயங்கர பில்ட் அப்பாக பி.ஜே.பியால் வைக்கப்பட்டிருந்த பிஎம் நரேந்திரமோடி படம் படுதோல்வி அடைந்திருப்பதுடன் போட்ட முதலீடுக்கும் நஷ்டம் வரும் என்று பாலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி வெளியாகி இருக்கிறது. ஓமங்குமார் இயக்கி உள்ள இந்த படத்தில் பிரபல இந்தி நடிகர் விவேக் ஓபராய் மோடியாக நடித்துள்ளார்.‘பிஎம் நரேந்திர மோடி’ என்று பெயரிடப்பட்ட இந்த படம் கடந்த ஏப்ரல் 12-ந்தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தேர்தல் நேரம் என்பதால் படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என தேர்தல் ஆணையம் தடை விதித்தது. இதை அடுத்து கடந்த வெள்ளிக்கிழமை மே 24-ந்தேதி படம் திரைக்கு வந்தது.

Oberoi

ரெயில் நிலையத்தில் டீ விற்பனை செய்து வந்த மோடி எப்படி கடுமையாக உழைத்து பிரதமர், அவர் குழந்தைப் பருவத்திலிருந்தே எப்படிப்பட்ட தேசபக்தராக ஆனார் என்பதை பற்றி படம் விளக்குகிறது. நரேந்திர மோடியின் நல்லப் பக்கங்கள் மட்டுமே படத்தில் பேசப்படுகிறது. அமித்ஷா வேடத்தில் மனோஜ் ஜோஷியும், மோடியின் அப்பாவாக ராஜேந்திர குப்தாவும் நடித்துள்ளனர்.

தேர்தல் ஆணையத்தால் இப்படம் நிறுத்திவைக்கப்பட்டது மோடிக்கு செய்யப்பட்ட மிகப்பெரிய நன்மை. இப்படத்தை மக்கள் பார்த்திருந்தால் அவருக்கு இன்னும் சில சதவிகித வாக்குகள் குறைந்திருக்கும் என்று கிண்டலடிக்கும் வட இந்திய ஊடகங்கள் படத்துக்கு மிக மட்டமான ரேட்டிங்கையே வழங்கியுள்ளனர்.இந்நிலையில் இந்த படம் மூன்று நாட்களில் நாடு முழுவதும் சேர்த்து ரூ.11.14 கோடி வசூல் செய்துள்ளது. முதல் நாளில், ரூ.2.88 கோடியும், இரண்டாவது நாளில் ரூ.3.76 கோடியும், மூன்றாவது நாளில் ரூ.4.50 கோடியும் வசூல் செய்துள்ளது.

வரும் வாரங்களில் இந்த வசூல் குறையும் இன்னும் தரைமட்டத்துக்கு வரும் என்றும் பி.ஜே.பியினர் கூட இப்படத்தை பார்க்க தியேட்டர் பக்கம் வருவதில்லை என்றும் சொல்கிறார்கள்.

gunaseelan Mon, 05/27/2019 - 20:45
modi biopic Vivek Oberoi box office flop PM Modi biopic சினிமா

English Title

Modi biopic flops at the box office

News Order

0

Ticker

1 
PM Modi Biopic

சொன்னா நம்பமாட்டீங்க! முதல் நாளிலேயே கலெக்சன் பார்த்த மோடி!

'கடந்த ஐந்து வருடங்களில் ஊழல் குற்றச்சாட்டே இல்லாத எங்கள் தலைவர் மோடியா கலெக்சனில் ஈடுபடப்போகிறார், அதுவும் வந்த முதல் நாளிலேயே என எப்படி தலைப்பு வைக்கலாம்' என பாஜக தொண்டர்கள் சண்ட...


விவேக் ஓபராய்

மோடியை வெறுப்பதைவிட்டுட்டு தேசத்தை நேசியுங்கள்: எதிர்க்கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்த விவேக் ஓபராய் 

மோடியை வெறுப்பதைவிட்டுட்டு தேசத்தை நேசியுங்கள் என்று எதிர்க்கட்சியினருக்கு நடிகர் விவேக் ஓபராய் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

பிரபல நடிகர் விவேக் ஓபராய்க்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டிஸ்

நடிகை ஐஸ்வர்யா ராய் குறித்த சர்ச்சைக்குரிய பதிவுக்காக பிரபல நடிகர் விவேக் ஓபராய்க்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது

மக்களவைத்தேர்தல் வாக்கு கணிப்புகளுடன் ஒப்பிட்டு நடிகர் சல்மான் கான் ஐஸ்வர்யா ராய் இணைந்து எடுத்த படம், தன்னுடன் ஐஸ்வர்யா ராய் எடுத்தப்படம் மற்றும் கணவர் அபிஷேக் பச்சன், மக்கள் ஆராத்யாவுடன் எடுத்தப்படம் ஆகியவற்றை இணைத்து விவேக் ஓபராய் அவரது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய மீம் ஒன்றை பதிவிட்டிருந்தர். அதில் கருத்துகணிப்பு, வாக்கு கணிப்பு, தேர்தல் முடிவு என அவர் குறிப்பிட்டிருந்தார். 

ஐஸ்வர்யா ராயின் கடந்த கால வாழ்க்கையை விமர்சிக்கும் வகையில் விவேக் ஓபராய் இந்த பதிவை வெளியிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த பதிவுக்கு சமூக வலைதளத்திலும் கடும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையமும், மகாராஷ்டிர மகளிர் ஆணையமும் நோட்டீஸ் அனுப்பியுள்ளன. இதனிடையே தாம் வெளிட்ட பதிவு தேவையில்லாமல் அரசியலாக்கப்படுவதாக விவேக் தெரிவித்துள்ளார்.

Aarthi Tue, 05/21/2019 - 09:19
Aishwarya rai Vivek Oberoi விவேக் ஓபராய் சினிமா

English Title

vivek oberai was got noticed because of aishwarya rai issue

News Order

0

Ticker

0 
meme

உலக அழகியை மையப்படுத்தி தேர்தல் கணிப்பு.... வைரலாகும் சர்ச்சைக்குரிய மீம்!

விவேக் ஓபராய். தற்போது மார்க்கெட் இழந்து மற்ற மொழி படங்களில் வில்லனாக நடித்து வருகின்றார். இவர் ஆரம்பத்தில் நடிகை ஐஸ்வர்யா ராயை காதலித்து நிச்சயத்தார்த்தம் வரை சென்றது குறிப்பிடத்த...

காந்தி சிலையருகே நின்று கமல் சொன்ன வார்த்தை...வரிசையில் நின்று தாக்கும் பிரபங்கள்!?

சென்னை: பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் இந்து தீவிரவாதம் குறித்து பேசிய கமல் ஹாசனுக்கு,கடும் கண்டனம் விடுத்துள்ளார். 
 
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன், அரவக்குறிச்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து நேற்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனத் தெரிவித்தார். மேலும் 'முஸ்லிம்கள் அதிகம் இருக்கும் இடம் என்பதால் இதனைச் சொல்லவில்லை. காந்தியார் சிலைக்கு முன்பு நின்றுக் கொண்டு இதனைச் சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே' என்று கூறினார். 

கமலின் இந்த சர்ச்சை பேச்சிக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல இந்தி நடிகர் விவேக் ஓபராய் ட்விட்டரில் பதிவு ஒன்று வெளியிட்டிருந்தார் அதில், 'அன்புள்ள கமல் ஹாசன் அவர்களே, நீங்கள் ஒரு சிறந்த கலைஞன். கலைக்கு எப்படி மதம் கிடையாதோ, அதே போல் தீவிரவாதத்துக்கும் மதம் கிடையாது.

vivek oberai

நீங்கள் கோட்சேவை தீவிரவாதி என்று கூறுங்கள். தவறில்லை. ஆனால் ஏன் ‘இந்து’ என்று குறிப்பிட்டு பேசுகிறீர்கள்? நீங்கள் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் வாக்கு சேகரிக்கச் சென்றதால், இப்படி பேசியுள்ளீர்களா? நாம் அனைவரும் ஒன்றே, தயவுசெய்து நாட்டை துண்டாக்காதீர்கள்' என்று பதிவு செய்துள்ளார். 

மேலும் பிரதமர் மோடியின் வாழக்கை வரலாற்று படத்தில் நடிகர் விவேக் ஓப்ராய் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Aarthi Mon, 05/13/2019 - 14:25
kamal hassan Vivek Oberoi கமல் ஹாசன் சினிமா

English Title

actor vivekoberoi questioned kamal hassan

News Order

0

Ticker

0 தேர்தல் முடியும்வரை பிஎம் நரேந்திர மோடி படத்துக்கு தடை!

ஓமங் குமார் இயக்கத்தில் விவேக் ஓபராய் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகவுள்ள பிஎம் நரேந்திர மோடி படத்துக்கு தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது.

மக்களவை தேர்தலையொட்டி பிஎம் நரேந்திர மோடி திரைப்படம் வெளியாவது அக்கட்சிக்கு வலு சேர்க்கும் என எதிர்கட்சியினர் குற்றம்சாட்டினர். இந்த படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு கொடுக்கப்பட்டது, மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்தது.

மோடி

அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. அதனை விசாரித்த நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, இதுதொடர்பாக நீதிமன்றம் ஏற்கனவே அதிகமான நேரத்தை செலவழித்து விட்டது. இன்னும் இந்த திரைப்படத்துக்கு தரச் சான்றிதழ் கூட வழங்கப்படவில்லை.

மோடி

இந்த படத்தின் மூலம் குறிப்பிட்ட கட்சிக்கு அரசியல் ஆதாயம் உள்ளதா என தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து முடிவெடுக்கட்டும். தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவே இறுதியானது என உத்தரவிடப்பட்டது.

modi

உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று எதிர்கட்சியின் மனுவை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம், பிஎம் நரேந்திர மோடி படத்துக்கு தடைவிதித்துள்ளது. தேர்தல் நேரத்தில் இந்த படம் வெளியாவது சரியாக இருக்காது, எனவே தேர்தல் முடியும் வரை இந்த படத்தை வெளியிடக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. ஆனால் நரேந்திர மோடிக்கு ஆதரவாக Modi: Journey of a Common Man எனும் வெப் சீரிஸ் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிங்க

காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் கமல் பட நாயகி: வெற்றி வாய்ப்பு கிட்டுமா? 

தி.மு.க கூட்டணி தோல்வியை அடையும்: மு.க.அழகிரி உறுதி ; கடுப்பான தி.மு.க.வினர்!

ஊழல் செய்தால் விஷ ஊசி போட்டு கொன்று விடுவேன்: சீமான் விமர்சனம்

Arunpandiyan Wed, 04/10/2019 - 15:06
PM Narendra Modi modi biopic banned Vivek Oberoi election commission of india bjp Narendra Modi மோடி படத்துக்கு தடை சினிமா

English Title

Pm Narendra modi movie banned till election complete; Election commission order

News Order

0

Ticker

0 
பாஜக ஆதரவாக விவேக் ஓபராய்

விவேக் ஓபராய் எனும் பாஜக கைக்கூலி; பிஎம் நரேந்திர மோடி படத்துக்கு திமுக, காங்கிரஸ் தடைகோருவது ஏன்?!

பாஜகவுக்கு மிக நெருக்கமான நடிகர்களில் விவேக் ஓபராயும் ஒருவர். 2014-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் உத்தர பிரதேச பாஜக தலைவர் வி.கே.சிங் என்பவரை ஆதரித்து விவேக் ஓபராய் தீவிர பிரசாரத்தில்...

தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்துமா பிஎம் நரேந்திர மோடி திரைப்படம்?!

பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல் பயணம் குறித்த பிஎம் நரேந்திர மோடி திரைப்படம் தேர்தலுக்கு முன்பே வெளியாகவுள்ளது.

மேரி கோம், சர்ப்ஜித் படங்களை இயக்கிய ஓமங் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பிஎம் நரேந்திர மோடி (Pm Narendra modi). விவேக் ஓபராய் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ள இத்திரைப்படம் வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதாவது மக்களவை தேர்தல் தொடங்கிய மறுநாள், தற்போது ஏப்ரல் 5-ஆம் தேதியே வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

நரேந்திர மோடி

மோடி குஜராத்தின் முதல்வராக இருந்தது துவங்கி பிரதமரான வரை இத்திரைப்படம் பேசும் என கூறப்படுகிறது. மோடி முதல்வராக இருந்தபோது நிகழ்த்தப்பட்ட  கோத்ரா ரயில் எரிப்பு பற்றி இதில் படமாக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்பே இந்தப் படம் வெளியாவதால், பாஜக தரப்புக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. பாஜக அரசாங்கம் இந்தப் படத்தை வெளிவர விடாமல் தடுக்கவும் வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

Arunpandiyan Wed, 03/20/2019 - 17:46
PM Narendra Modi Vivek Oberoi Omung Kumar Lok Sabha Election PM Narendra modi சினிமா

English Title

Does Pm Narendra modi movie affects the bjp in lok sabha election

News Order

0

Ticker

0 
கோப்ரா போஸ்ட்

கோப்ரா போஸ்ட் #OperationKaraoke: மக்களவை தேர்தல் பிரச்சாரத்துக்கு பணம் வாங்கிய 36 பாலிவுட் பிரபலங்கள்

மக்களவை தேர்தலுக்கு பிரச்சாரம் செய்ய 36 பாலிவுட் பிரபலங்கள் பணம் பெற்றிருப்பதாக கோப்ரா போஸ்ட் எனும் புலனாய்வு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.narendramodi

நரேந்திர மோடி பயோபிக்கில் நடிக்கும் அஜித் பட வில்லன்!

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் அவரது கேரக்டரில் பாலிவுட் நடிகை விவேக் ஓபராய் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.