‘அரசுக்கு உறுதுணையாக திகழ்ந்தவர் விவேக்’ – முதல்வர் பழனிசாமி இரங்கல் !

 

‘அரசுக்கு உறுதுணையாக திகழ்ந்தவர் விவேக்’ – முதல்வர் பழனிசாமி இரங்கல் !

நடிகர் விவேக் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

நடிகர் விவேக் நேற்று மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் நடிகர் விவேக்கின் உடலுக்கு கலைஞர்கள்,பொது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கலைவாணர் என்எஸ்கே போல் படங்களில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை எடுத்துக் கூறியவர் விவேக் நகைச்சுவை மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தியதால் சின்ன கலைவாணர் என அழைக்கப்பட்டார் விவேக். 200ற்கும் மேற்பட்ட படங்களில் நடத்த இவர், பல விருதுகளையும் வென்றுள்ளார். அத்துடன் சமூக செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்த இவர் சுமார் ஒரு கோடி மரங்களை நட்டு விழிப்புணர்வை ஊட்டியுள்ளார். அத்துடன் தமிழக அரசின் பிளாஸ்டிக் இல்லா தமிழகம் உள்ளிட்ட பல விழிப்புணர்வு விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

‘அரசுக்கு உறுதுணையாக திகழ்ந்தவர் விவேக்’ – முதல்வர் பழனிசாமி இரங்கல் !

இந்நிலையில் முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “சின்ன கலைவாணர் என அழைக்கப்படும் நடிகர் விவேக் மறைவால் வேதனை அடைந்தேன்.30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரை உலகில் சிறந்த நடிகராக தன் ஆளுமையை கோலோச்சியவர். தமிழகத்திற்கு பெருமை சேர்த்த விவேக்கின் மறைவு திரையுலகிற்கு ரசிகர்களுக்கு பேரிழப்பு.எண்ணற்ற படங்களில் விவேக் நடிப்பு சிரிக்க வைத்ததோடு மட்டுமின்றி சிந்திக்கவும் வைத்தது.கலை சேவையாலும், சமூக சேவை ஆளும் பெருமை சேர்த்த விவேக்கின் மறைவு மிகப்பெரிய இழப்பு.பிளாஸ்டிக் தடை ,கொரோனா விழிப்புணர்வு பணிகளில் அரசுக்கு உறுதுணையாக திகழ்ந்தவர் விவேக். நடிகர் விவேக்கின் இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

‘அரசுக்கு உறுதுணையாக திகழ்ந்தவர் விவேக்’ – முதல்வர் பழனிசாமி இரங்கல் !

முன்னதாக நடிகர் விவேக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது, “நடிகர் விவேக் அவர்கள் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி கேட்டு மிக மனவேதனை அடைந்தேன். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று முதல்வர் பழனிசாமி வாழ்த்து கூறியது குறிப்பிடத்தக்கது.