உடல் சோர்வு முதல் நரம்புத் தளர்வு வரை… வைட்டமின் பி1 ஏன் அவசியம் தெரியுமா?

 

உடல் சோர்வு முதல் நரம்புத் தளர்வு வரை… வைட்டமின் பி1 ஏன் அவசியம் தெரியுமா?

நம்முடைய உடல் ஆரோக்கியமாக இயங்க ஊட்டச்சத்துக்கள், தாதுஉப்புக்கள் தேவை. வைட்டமின் பி1 எனப்படும் தயாமின் நம்முடைய நரம்பு மண்டலம், தசை, இதயம் ஆரோக்கியமாக செயல்பட அவசியம் தேவை. வைட்டமின் பி1 பற்றிய 10 தகவலைத் தெரிந்துகொள்வோம்.
1) வைட்டமின் 1 நீரில் கரையக் கூடிய வைட்டமின். இந்த வைட்டமின்னை நம்முடைய உடலால் சேகரித்து வைக்க முடியாது. எனவே, இதை தினசரி நம்முடைய உணவு மூலமாக மட்டுமே நம்மால் எடுத்துக்கொள்ள முடியும்.
2) முழு தானியங்கள், கைக்குத்தல் அரிசி, பருப்பு வகைகள், இறைச்சி, முட்டை போன்றவற்றில் வைட்டமின் 1 உள்ளது. காய்கறிகளில் காலிஃபிளவர், ஆரஞ்சு, உருளைக்கிழங்கு ஆகியவற்றிலும் உள்ளது.

உடல் சோர்வு முதல் நரம்புத் தளர்வு வரை… வைட்டமின் பி1 ஏன் அவசியம் தெரியுமா?
3) தயாமின் நம்முடைய நரம்பு மண்டலம், தசைகள், இதயம், வயிறு, குடல் போன்றவை ஆரோக்கியமாக இயங்க துணை புரிகிறது. இதயம். நரம்பு மண்டலம், செரிமான மண்டலத்தில் ஏற்படும் பாதிப்பான பெரிபெரி என்ற பிரச்னைக்கு முக்கிய காரணம் இந்த வைட்டமின் பற்றாக்குறைதான்.
4) ஒரு நாளைக்கு ஆண்களுக்கு 1.2 மில்லி கிராம் அளவுக்கும் பெண்களுக்கு 1.1 மி.கி அளவுக்கும் தேவைப்படுகிறது. பாலூட்டும் தாய்மார்களுக்கு தினசரி உணவில் 1.4 மி.கி அளவுக்கு தயாமின் சத்து தேவைப்படுகிறது.

உடல் சோர்வு முதல் நரம்புத் தளர்வு வரை… வைட்டமின் பி1 ஏன் அவசியம் தெரியுமா?
5) நம்முடைய உடலில் உள்ள கார்போஹைட்ரேட், கொழுப்பு மற்றும் புரதத்தை உடல் பயன்படுத்தும் வகையில் குளுக்கோஸாக மாற்ற பி1 அவசியம்.
6) கல்லீரல், சருமம், முடி வளர்ச்சி, கண்களின் ஆரோக்கியத்துக்கு துணை புரிகிறது. மூளை செயல்திறன் மேம்பட தினசரி உணவில் போதுமான அளவு வைட்டமின் பி1 இருப்பது அவசியம்.
7) காபி, டீ அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு வைட்டமின் பி1 கிரகிக்கப்படும் சக்தி குறைவாகவே இருக்கும். காபி, டி-யில் உள்ள டேனின் என்ற ரசாயனம் வைட்டமின் பி1 கிரகிக்கப்படுவதைத் தடுக்கிறது.

உடல் சோர்வு முதல் நரம்புத் தளர்வு வரை… வைட்டமின் பி1 ஏன் அவசியம் தெரியுமா?
8) அதிக வெப்பமும் பி1-ஐ சிதைத்துவிடும். எனவே, வைட்டமின் பி1 சத்துள்ள உணவை அதிகம் சூடுபடுத்தக் கூடாது. மேலும், மீண்டும் மீண்டும் சூடுபடுத்தும்போதும் வைட்டமின் பி1 சிதைந்துவிடும்.
9) சிறுநீரக செயலிழப்பு காரணமாக டயாலிசிஸ் செய்துகொள்ளும் நோயாளிகளுக்கும் தயாமின் பற்றாக்குறை ஏற்படும். அவர்கள் மருத்துவர் பரிந்துரை அடிப்படையில் மல்டி வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம்.
10) மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கும் வைட்டமின் பி1 பற்றாக்குறை இருக்கும். ஆல்கஹாலும் கூட வைட்டமின் பி1 கிரகிக்கப்படுவதை தடுக்கும். எனவே, வைட்டமின் பி1 பற்றாக்குறை உள்ளவர்கள் காபி, டீ, மது வகைகள், புகையிலை மெல்வது போன்ற பழக்கத்துக்கு குட்பை சொல்வது நல்லது.