பொது சிவில் சட்டத்தை வெளிப்படையாக விவாதிப்பதில் என்ன பிரச்சினை… விஷ்வ இந்து பரிஷத் கேள்வி

 

பொது சிவில் சட்டத்தை வெளிப்படையாக விவாதிப்பதில் என்ன பிரச்சினை… விஷ்வ இந்து பரிஷத் கேள்வி

பொது சிவில் சட்டத்தை வெளிப்படையாக விவாதித்தால் என்ன பிரச்சினை என்று விஷ்வ இந்து பரிஷத்தின் சர்வதேச இணை பொது செயலாளர் சுரேந்திர ஜெயின் கேள்வி எழுப்பியுள்ளார்

ஆர்.எஸ்.எஸ். இணை பொதுச் செயலாளர் தத்தாதரேயா ஹோசாபலே கடந்த சில தினங்களுக்கு முன் பொது சிவில் சட்டம் குறித்து பொது விவாதம் நடத்த வேண்டும். இது தொடர்பான மசோதாவை கொண்டு வருவதற்கான சரியான நேரம் இதுதானா, இல்லையா என்பது மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்தார். தத்தாதரேயாவின் பொது சிவில் சட்டம் தொடர்பாக பொது விவாதம் நடத்த வேண்டும் என்ற கருத்துக்கு விஷ்வ இந்து பரிஷத்தின் சர்வதேச இணை பொது செயலாளர் சுரேந்திர ஜெயின் ஆதரவு தெரிவித்துள்ளார்.

பொது சிவில் சட்டத்தை வெளிப்படையாக விவாதிப்பதில் என்ன பிரச்சினை… விஷ்வ இந்து பரிஷத் கேள்வி
பொது சிவில் சட்டம்

இது தொடர்பாக சுரேந்திர ஜெயின் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பொது சிவில் சட்டத்தை வெளிப்படையாக விவாதித்தால் என்ன பிரச்சினை. எந்த அச்சங்கள் இருந்தாலும் அவை நடுநிலையாக இருக்க வேண்டும். நாட்டின் அபிவிருத்திக்கு, அந்நியப்படுதல் உணர்வை தடுக்கவும், அமைதியான சூழலை உருவாக்கவும் பொது சிவில் சட்டம் குறித்து வெளிப்படையான விவாதம் இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. இதுதான் இன்றைய கோரிக்கை.

பொது சிவில் சட்டத்தை வெளிப்படையாக விவாதிப்பதில் என்ன பிரச்சினை… விஷ்வ இந்து பரிஷத் கேள்வி
சுரேந்திர ஜெயின்

பொது சிவில் சட்டம் மிகவும் பழமையானது. பீம்ராவ் அம்பேத்கர் இதை அரசியலமைப்பின் வழிநடத்தும் கொள்கையில் வைத்திருந்தார். பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும்படி உச்ச நீதிமன்றமே 4 முறைக்கு மேல் அறிவுறுத்தியுள்ளது. தனது குடிமகன்களுக்கு ஒரே மாதிரியான சட்டங்கள் இல்லாத நாடுகள் இல்லை. இந்தியாவிலும் அது போன்ற சட்டங்கள் இருந்தால், என்ன பிரச்சினை? பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது இந்துத்வா கொள்கையை திணிக்கும் முயற்சி என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் தங்களது நடைமுறைகளில் திருத்தங்கள் செய்ததை இந்து சமூகம் எத்தனை முறை ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.