ஜுவாலாவுடன் திருமணம்.. தேதியை அறிவித்த விஷ்ணு விஷால்!

 

ஜுவாலாவுடன் திருமணம்.. தேதியை அறிவித்த விஷ்ணு விஷால்!

வெண்ணிலா கபடிக் குழு, நேற்று இன்று நாளை, ராட்சசன், மாவீரன் கிட்டு, காடன், முண்டாசுப்பட்டி, சிலுக்குவார்பட்டி சிங்கம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் கால் பதித்தவர் விஷ்ணு விஷால். இவர் கடந்த 2010ஆம் ஆண்டு ரஜினி நட்ராஜை திருமணம் முடித்த நிலையில், கடந்த 2018ம் ஆண்டு விவாகரத்து பெற்றுக் கொண்டார்.

ஜுவாலாவுடன் திருமணம்.. தேதியை அறிவித்த விஷ்ணு விஷால்!

இதையடுத்து, விஷ்ணு விஷால் பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை காதலித்து வருவதாக தகவல்கள் கசிந்தது. இதன் காரணமாகவே அவர் ரஜினி நட்ராஜை விவாகரத்து செய்ததாகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்த விஷ்ணு விஷால், தாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக பழகி வருவதாக விளக்கம் அளித்தார். இருப்பினும், இருவரும் இணைந்து இருப்பது போன்ற புகைப்படங்கள் சோஷியல் மீடியாக்களில் வைரலாகி அவர்கள் காதலிப்பதை உறுதிப்படுத்தியது.

ஜுவாலாவுடன் திருமணம்.. தேதியை அறிவித்த விஷ்ணு விஷால்!

பிறகு, ஒரு வழியாக விஷ்ணு விஷாலும் ஜுவாலா கட்டாவும் தாங்கள் காதலித்து வருவதையும் திருமணம் செய்து கொள்ளவிருப்பதையும் அறிவித்தனர். ஏப்ரல் இறுதியில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக விஷ்ணு விஷால் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், விஷ்ணு விஷால் தனது திருமண பத்திரிகையை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஏப்ரல் 22 ஆம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருமண தேதியை அறிவித்த விஷ்ணு விஷாலுக்கு வாழ்த்து மழை பொழிகிறது.