• April
    02
    Thursday

Main Area

Main



ஆக்ஷன் படத்தில் இணைந்த விஷால்

விஷால்
விஷால்

சென்னை: சுந்தர் சி- விஷால் கூட்டணியில் உருவாகிவரும் படத்திற்கு ஆக்ஷன் என்று பெயரிட்டுள்ளனர். 

ஆம்பள படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சுந்தர்.சி- விஷால் கூட்டணி உருவாகியுள்ளது. இதில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடிக்க மற்றொரு நாயகியாக மலையாளத்தில் பிரபலமான ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார். இவர்களுடன் யோகிபாபு, ராம்கி, சாயாசிங், ஷாரா, பழ கருப்பையா, கபீர்சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

இந்த நிலையில் இந்த படத்திற்கு ‘ஆக்‌ஷன்’ என்று தலைப்பு வைத்துள்ளதாகப் படக்குழு அறிவித்து உள்ளனர். இதில் விஷால் மிலிட்டரி கமாண்டோ ஆபீஸராக நடித்துவருகிறார்.ஒரு உண்மையை கண்டு பிடிக்க பல நாடுகள் செல்லும் பொது அங்கே பல ஆக்ஷன்,சேசிங்  போன்ற காட்சிகள் நடைபெறும் என்று கூறப்படுகிறது. 

விஷால்

மேலும் இந்த படத்தில் பல ஆக்ஷன் காட்சிகளில் டூப் இல்லாமல் விஷால் நிஜமாகவே நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் விரைவில் இந்த படம் குறித்த மற்ற அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

2018 TopTamilNews. All rights reserved.