நேற்றிரவு ஸ்டாலின் வீட்டுக்கு சென்ற நடிகர் விஷால்…வைரல் போட்டோஸ்!

 

நேற்றிரவு ஸ்டாலின் வீட்டுக்கு சென்ற நடிகர் விஷால்…வைரல் போட்டோஸ்!

தமிழகத்தின் 12வது முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று பதவி ஏற்றார். அவரை தொடர்ந்து 33 அமைச்சர்கள் ஒருவர் பின் ஒருவராக பதவி ஏற்றுக்கொண்டனர். ஸ்டாலின் குடும்பத்தினர், சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நேற்றிரவு ஸ்டாலின் வீட்டுக்கு சென்ற நடிகர் விஷால்…வைரல் போட்டோஸ்!

பதவியேற்பு விழாவை அடுத்து அண்ணா நினைவிடம், கருணாநிதி நினைவிடம், கோபாலபுரம் இல்லம் என சென்று வந்த ஸ்டாலின் தலைமை செயலகத்துக்கு விரைந்தார். அங்கு ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் அவர் இன்று முதல் தனது பணியை தொடங்கியுள்ளார். முதல் கட்டமாக ஸ்டாலின் கொரோனா நிதியுதவி, மகளிருக்கான இலவச பேருந்து பயணம், தனியார் கொரோனா கட்டணம் அரசே ஏற்கும் உள்ளிட்ட ஐந்து கோப்புகளில் கையெழுத்திட்டார்.

நேற்றிரவு ஸ்டாலின் வீட்டுக்கு சென்ற நடிகர் விஷால்…வைரல் போட்டோஸ்!

இந்நிலையில் தமிழக முதல்வராக பதிவியேற்றுள்ள ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து கூறி வரும் நிலையில் நேற்று நடிகர்கள் விஷால், ரமணா ஆகியோர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து கூறினர். அத்துடன் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி எம்எல்ஏவாக தேர்வாகியுள்ள உதயநிதியையும் சந்தித்து அவர்கள் சால்வை அணிவித்து மரியாதை செய்தனர்.