• February
    17
    Monday

Main Area

Main



டம்மியாகும் அமராவதி... நிர்வாக தலைநகராக மாறும் விசாகபட்டினம்! - மசோதா தாக்கலானது

jagan mohan
jagan mohan

ஆந்திர மாநிலத்துக்கு மூன்று தலைநகரங்களை உருவாக்கும் திட்டத்துக்கான மசோதா கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இன்று ஆந்திர சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகராக ஐதராபாத் இருந்து வந்தது. ஆந்திராவிலிருந்து தெலங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது. தெலங்கானாவுக்குள் ஐதராபாத் நகரம் உள்ளதால் அது தெலங்கானாவுக்கு அளிக்கப்பட்டது. இதனால், ஆந்திரப் பிரதேசத்துக்கு என்று தனியாக ஒரு தலைநகரை உருவாக்கிக்கொள்ளத் திட்டமிடப்பட்டது. ஏற்கனவே உள்ள நகரங்களை மேம்படுத்துவதற்கு பதில் புதிதாக உலகத் தரத்தில் தலைநகரை உருவாக்க அப்போது முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு திட்டமிட்டார். இதற்காக அமராவதி என்ற நகரம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்காக 33 ஆயிரம் ஏக்கர் நிலங்களை அரசு கையகப்படுத்தியது.

chanrababu


தற்போது புதிதாக பொறுப்பேற்ற ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் ஜெகன் மோகன் தலைமையிலான அரசு, அமராவதியுடன் சேர்த்து விசாகபட்டினம், கர்னூல் மாவட்டங்களையும் ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகராக அறிவிக்கத் திட்டமிட்டது. இதற்கு தெலுங்கு தேசம் மற்றும் விவசாய அமைப்புகள் போராட்டம் நடத்தின. ஆனால் எதிர்ப்பு கண்டு கொஞ்சம் கூட பின்வாங்காமல் மூன்று தலைநகரம் என்ற சட்ட மசோதாவை ஜெகன் மோகன் அரசு இன்று சட்டப் பேரவையில் தாக்கல் செய்துள்ளது. ஆந்திர சட்டப்பேரவையில் ஜெகன் மோகன் கட்சிக்கு அசுர பலம் உள்ளதால் மிக எளிதில் இந்த மசோதா நிறைவேற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

vishgapattnam


இதன்படி அமராவதி நகரம் சட்டப்பேரவைத் தலைநகராகவும், விசாகப்பட்டினம் நிர்வாக ரீதியான தலைநகராகவும், நீதிமன்றத் தலைநகராக கர்னூல் நகரும் இருக்கும். இதன்படி அமராவதியில் இருக்கும் தலைமைச் செயலகம் செயல்படாது. விசாகப்பட்டினத்தில் புதிய தலைமைச்செயலகம் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளின் ஈகோ பிரச்னை காரணமாக மக்கள் பணம் வீணாவது வேதனையாக உள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.