சீனாவில் மீண்டும் ஆட்டம் காட்டும் வைரஸ்! – ஏழு பேர் பலி..

சீனாவில் மீண்டும் ஆட்டம் காட்டும் வைரஸ்! – ஏழு பேர் பலி..

பழைய வைரஸ்தான் என்று நிபுணர்கள் தகவல்
உலகமே வூகானில் தொடங்கிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சீனாவில் புதிதாக பூச்சி மூலம் பரவும் வைரஸ் கிருமி காரணமாக ஏழு பேர் பலியாகி உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. இது 10 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் வகைதான் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் மீண்டும் ஆட்டம் காட்டும் வைரஸ்! – ஏழு பேர் பலி..

உலக அளவில் கொரோனா மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தியுள்ளது. தொழில்கள் முடங்கியுள்ளதால் மக்கள் வேலை வாய்ப்பை இழந்து வருகின்றனர். இந்த நிலையில் சீனாவில் பூச்சி மூலம் பரவும் வைரஸ் தொற்று ஒன்றை நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.

சீனாவில் மீண்டும் ஆட்டம் காட்டும் வைரஸ்! – ஏழு பேர் பலி..

சீனாவின் ஜியாங்சு மாணாகத்தில் இதுவரை இந்த புதிய வகை வைரஸ் தொற்று காரணமாக ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். 60க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு வகையான ஈ, வண்டு, உண்ணிகள் மூலம் மனிதர்களுக்கு இந்த வைரஸ் கிருமி பரவுகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சீனாவில் மீண்டும் ஆட்டம் காட்டும் வைரஸ்! – ஏழு பேர் பலி..
இந்த வைரஸ் கிருமிக்கு எஸ்.எஃப்.டி.எஸ் என்ற பெயர் உள்ளது என்று கூறப்படுகிறது. இது புதிதாக கண்டறியப்பட்ட வைரஸ் இல்லை, 2011ம் ஆண்டில் இருந்து பரவும் வைரஸ்தான் என்று வைரலாஜி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
முதலில் இந்த வைரஸ் பூச்சி, வண்டுகள் மூலம் மனிதர்களுக்கு பரவும் என்றும், மனிதருக்கு தொற்று ஏற்பட்டுவிட்டால் அவர் மூலமாக மற்ற மனிதர்களுக்கு எளிதில் பரவும் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து ஹிஜியாங் பல்கலைக் கழக மருத்துவர் கூறுகையில், “மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு இந்தத் தொற்று பரவும் வாய்ப்பு உள்ளதை மறுக்க முடியாது. எனவே, மக்கள் பூச்சிக் கடிகளை சாதாரணமாக கருதாமல் சிகிச்சை பெற வேண்டும். வீணாக பீதி அடைய வேண்டாம்” என்றார்.

சீனாவில் மீண்டும் ஆட்டம் காட்டும் வைரஸ்! – ஏழு பேர் பலி..