விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து : குத்தகைதாரர் கைது!

 

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து : குத்தகைதாரர் கைது!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளத்தில் இயங்கி வந்த தனியார் பட்டாசு ஆலையில் நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் கர்ப்பிணி உட்பட 19 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.3 லட்சம் நிவாரணமும் மத்திய அரசு சார்பில் ரூ.2 லட்சம் நிவாரணமும் அறிவிக்கப்பட்டது.

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து : குத்தகைதாரர் கைது!

இச்சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இந்த பட்டாசு ஆலை உரிமம் பெற்றவர் விதிகளை மீறி குத்தகைக்கு விட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு, பட்டாசு ஆலை விதிகளை மீறி இயங்கியதும் அம்பலமானது. இது தொடர்பாக, ஆலை உரிமையாளர் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வெடி விபத்து ஏற்பட்ட தனியார் ஆலையை குத்தகைக்கு எடுத்து நடத்திய பொன்னுபாண்டி என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகரில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 161 வெடி விபத்துகள் நடந்திருக்கும் நிலையில், 310 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.