’உண்மை இருந்தால் பயம் தேவையில்லை’ விராட் கோலி ட்விட் சொல்வது என்ன?

கொரோனாவால் அறிவிக்கப்பட்டுள்ள லாக்டெளன் நாட்கள் நீட்டித்துக்கொண்டே செல்லப்படுகின்றன. இந்நிலையில் பொழுதுபோக்க ஆன்லை விளையாட்டுகள் சூடுபிடித்து வருகின்றன. அதிலும் பணம் வைத்து விளையாடும் ஆட்டங்கள் த்ரிலோடு முழுநேரமும் அதில் மூழ்குபவர்கள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றனர்.

ஆன்லைன் சூதாட்ட விளையாடுகளில் பலரையும் ஈர்த்தது ரம்மி எனும் ஒருவகை சீட்டாட்டம். இந்த விளையாட்டுக்கு டிவி, சோஷியல் மீடியாக்களில் அடிக்கடி விளம்பரங்கள் வந்துகொண்டே இருக்கும். அதனால் ஏராளமான இளைஞர்கள் அதில் பணம் ஆடி வந்தனர்.

அரசியல் கட்சி தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் இந்த ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்யச் சொல்லி கோரிக்கை விடுத்துவந்தனர். சென்னையில் கூட ஓர் இளைஞன் ரம்மி விளையாட்டில் ஏராளமான பணத்தை இழந்த விரக்தியில் தற்கொலை செய்துகொண்டான் என்ற செய்தி சில நாள்களுக்கு முன் வெளிவந்தது.

இந்த விளையாட்டுக்கான விளம்பரத்தில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் திரைப்பட நடிகை தமன்னா நடித்திருந்தனர். சூதாட்ட விளம்பரத்தில் நடித்ததற்காக இவர்கள் மீது புகார் பதியப்பட்டுள்ளது. இதன் விசாரணை இன்னும் சில நாள்களில் வரவிருக்கிறது.

இதனால் விராட் கோலி விரைவில் கைது செய்யப்படுவார் என்ற செய்தி நேற்றிலிருந்து வந்துகொண்டிருக்கிறது. சோஷியல் மீடியாவிலும் இதுகுறித்த விவாதம் சென்றுகொண்டிருக்கிறது.

இந்த நிலையில் விராட் கோலி ட்விட் ஒன்றைப் பதிந்துள்ளார். ’உங்களிடம் உண்மை இருந்தால் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்படும் சூழலில் இருக்கிறார் எனும் பேச்சு இருக்கும் நிலையில் இந்த ட்விட் மூலம் தன்னிடம் உண்மை இருக்கிறது என்று சொல்ல வருகிறாரா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

 

Most Popular

தமிழகத்தில் பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது: குணமடைந்தோர் 2,44,675 பேர்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. குணமடைந்தோர் 2,44,675 பேர் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. 3,02,815 பேர் தமிழகத்தில் கொரோவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், சென்னையில் மட்டும்...

தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 114 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 114 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு 3,02,815 பேர் கொரோவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், சென்னையில் மட்டும் 1,10,121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....

தமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை -976, செங்கல்பட்டு -483, அரியலூர் -54, கோவை -392, கடலூர் -287, தருமபுரி -18, திண்டுக்கல் -173, ஈரோடு -37, கள்ளக்குறிச்சி...

செப்., 30 வரை ரயில்கள் ரத்து இல்லை! ரயில்வே அமைச்சகம் மறுப்பு!

நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், மெயில், விரைவு ரயில்கள், பயணிகள் மற்றும் புறநகர் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று வெளியான...