ஆர்சிபி அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறார் கோலி

 

ஆர்சிபி அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறார் கோலி

நடப்பு ஐபிஎல் தொடருக்கு பின் பெங்களூரு அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக கோலி அறிவித்துள்ளார்.

ஆர்சிபி அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறார் கோலி

இந்திய அணியின் மூன்று வடிவ போட்டிகளிலும் கேப்டனாக செயல்பட்டு வருகிறார் விராட் கோலி. அதிகப்படியான வேலைப்பளுவின் காரணத்தினால் வரும் டி20 உலகக் கோப்பைக்கு பிறகு 20 ஓவர் வடிவ போட்டிகளில் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அண்மையில் அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது ஆர்சிபி கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “வணக்கம் பெங்களூரு அணி ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு ஒரு அறிவிப்பு. நடப்பு ஐபிஎல் தொடருக்கு பின் பெங்களூரு அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலக முடிவு செய்துள்ளேன். இதுகுறித்து ஆர்சிபி நிர்வாகத்திடம் பேசினேன். கேப்டன் பதவியிலிருந்து விலகினாலும் ஒரு பேட்ஸ்மேனாக அணிக்கு எனது ஆர்சிபி அணிக்கு பங்களிப்பை முழுமையாக கொடுப்பேன். தற்போது, டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிக்கு தலைமை தாங்க தயாராக வேண்டும் என்பதால், தீவிர ஆலோசனைக்கு பின்னர், டி20 அணித் தலைவர் பதவியில் இருந்து விலக முடிவு செய்தேன். ஆர்சிபி அணியின் கேப்டனாக இருந்தபோது எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி” எனக் கூறியுள்ளார்.