பொதுமுடக்க காலத்திலும் இன்ஸ்டாகிராம் பதிவுகள் மூலம் அதிக வருமானம் ஈட்டிய விராட் கோலி

 

பொதுமுடக்க காலத்திலும் இன்ஸ்டாகிராம் பதிவுகள் மூலம் அதிக வருமானம் ஈட்டிய விராட் கோலி

மும்பை: பொதுமுடக்க காலத்திலும் இன்ஸ்டாகிராம் பதிவுகள் மூலம் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி அதிக வருமானம் ஈட்டியுள்ளார்.

பொதுமுடக்க காலத்தில் ஸ்பான்சர் செய்யப்பட்ட இன்ஸ்டாகிராம் பதிவுகள் மூலம் அதிக வருமானம் ஈட்டிய உலகின் முதல் 10 விளையாட்டு வீரர்களின் பட்டியலில் இடம்பெற்ற ஒரே ஒரு கிரிக்கெட் வீரராக இந்திய கேப்டன் விராட் கோலி பெருமையான அந்தஸ்தை பெற்றுள்ளார்.

கடந்த மார்ச் 12 முதல் மே 14 வரையிலான காலகட்டத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் அதிக வருமானம் ஈட்டிய விளையாட்டு வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் விராட் கோலி ஆறாவது இடத்தை பிடித்துள்ளார்.

பொதுமுடக்க காலத்திலும் இன்ஸ்டாகிராம் பதிவுகள் மூலம் அதிக வருமானம் ஈட்டிய விராட் கோலி

அதன்படி விராட் கோலி தனது ஸ்பான்சர் இன்ஸ்டாகிராம் பதிவுகள் மூலம் மொத்தம் 379,294 (தோராயமாக ரூ.3 கோடியே 62 லட்சத்திற்கும் மேல்) பவுண்டுகள் சம்பாதித்துள்ளார். அதாவது சராசரியாக ஒரு பதிவுக்கு 126,431 (தோராயமாக ரூ.1 கோடியே 20 லட்சத்திற்கும் மேல்) பவுண்டுகள் வரை சம்பாதித்துள்ளார்.

இந்த பட்டியலில் போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 1.8 மில்லியன் பவுண்டுகளுடன் முதலிடத்திலும், அர்ஜென்டினா மற்றும் எஃப்சி பார்சிலோனா நட்சத்திரமான லியோனல் மெஸ்ஸி மற்றும் பி.எஸ்.ஜியின் நெய்மர் ஆகியோர் முறையே 1.2 மில்லியன் மற்றும் 1.1 மில்லியன் வருவாயுடன் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர்.