“சென்னை ரசிகர்கள் புத்திசாலிகள்; அவர்களின் கிரிக்கெட் புரிதல் அபாரமானது” – கிங் கோலி புகழாரம்!

“சென்னை ரசிகர்கள் புத்திசாலிகள்; அவர்களின் கிரிக்கெட் புரிதல் அபாரமானது” – கிங் கோலி புகழாரம்!

விளையாட்டுப் போட்டிகளைப் பொறுத்தவரை மைதானத்தில் இருக்கும் ரசிகர்களின் ஆரவாரம் தான் வீரர்களுக்கு பூஸ்ட். கொரோனாவால் நிறுத்திவைக்கப்பட்ட போட்டிகள், மீண்டும் ரசிகர்களின்றி நடத்தப்பட்டன. குறிப்பாக இந்தியாவில் எந்தப் போட்டியிலும் ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் இந்திய வீரர்களுக்கு அந்த பூஸ்ட் கிடைக்கவில்லை. ஆஸ்திரேலியாவில் அந்நாட்டு ரசிகர்கள் நம்முடைய வீரர்களிடம் வம்பைத் தான் இழுத்தார்கள். இச்சூழலில் தான் இங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்றது. இதில் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். அதனால் போட்டியில் என்ன மாற்றம் ஏற்பட்டது என்பது குறித்து கோலி கூறியிருக்கிறார்.

“சென்னை ரசிகர்கள் புத்திசாலிகள்; அவர்களின் கிரிக்கெட் புரிதல் அபாரமானது” – கிங் கோலி புகழாரம்!

317 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றிபெற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய கோலி, “முதல் போட்டியில் சொந்த மண்ணில் ரசிகர்கள் இல்லாமல் ஆடியது வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்தது. 2ஆவது போட்டியிலும் முதல் இரண்டு நாள் எங்களுக்கு உற்சாகம் இல்லை. அதன்பின் ஆட்டத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டது. குறிப்பாக 2ஆவது இன்னிங்ஸ் சிறப்பாக இருந்தது.

“சென்னை ரசிகர்கள் புத்திசாலிகள்; அவர்களின் கிரிக்கெட் புரிதல் அபாரமானது” – கிங் கோலி புகழாரம்!

அதனைச் சாத்தியமாக்கியது சென்னை ரசிகர்கள் தான். மைதானத்தில் மக்கள் இருந்தால் அது எப்படி உத்வேகம் அளிக்கும், ஆட்டம் எப்படியெல்லாம் மாறும் என்பதற்கு இந்தப் போட்டி ஆகச்சிறந்த உதாரணம். சென்னை ரசிகர்கள் மிகவும் புத்திசாலியான ரசிகர்கள். கிரிக்கெட் மீதான அவர்களின் புரிதல் அபாரமானது. இதைக் கண்டு நான் வியந்துபோயிருக்கிறேன். அவர்களை உற்சாகப்படுத்துவதே என்னுடைய வேலை. கடும் வெயிலில் ஆட வேண்டும் என்றால், அதற்கு ரசிகர்களின் ஆரவாரம் நிச்சயம் தேவை. சென்னை ஆடுகலம் இரண்டு அணிக்கும் சவாலானதாகவே இருந்தது” என்றார்.

“சென்னை ரசிகர்கள் புத்திசாலிகள்; அவர்களின் கிரிக்கெட் புரிதல் அபாரமானது” – கிங் கோலி புகழாரம்!

போட்டியின்போது ரசிகர்களிடம் விசில் அடிக்க கோலி உற்சாகப்படுத்திய வீடியோ செம வைரலானது. அதேபோல அஸ்வின் பந்து போடும்போது கோலி உள்ளிட்ட இந்திய வீரர்கள் தமிழில் பேசி உற்சாகமளித்தனர். இதுபோன்ற செயல்களே தமிழ் மக்கள் மீது கிரிக்கெட் வீரர்களுக்கு எவ்வளவு அன்பு இருப்பதை எடுத்துக்காட்டுகிறது. இதனால் தான் இந்திய அணியிலிருந்து விலகும்போது கூட கலங்காத தல தோனி, ஐபிஎல்லில் சென்னை அணிக்குத் தடைவிதித்தபோது உடைந்து அழுதுவிட்டார்.