WWE ராக்குடன் இணைந்த ‘கிங்’ கோலி… ரொனால்டோ, மெஸ்ஸியுடனும் போட்டி!

 

WWE ராக்குடன் இணைந்த ‘கிங்’ கோலி… ரொனால்டோ, மெஸ்ஸியுடனும் போட்டி!

இந்திய கிரிக்கெட்டின் முடிசூடா மன்னனாக வலம்வருபவர் கிங் கோலி. ஆன் ஃபீல்டில் மட்டுமில்லாமல் ஆப் ஃபீல்டிலும் கலக்கிவருபவர். விளம்பரத்திற்காக அதிக சம்பளம் பெறும் வீரர், இன்ஸ்டாவில் ஒரு பதிவிட அதிக தொகை வாங்கும் வீரர் என்ற பெருமைகளுக்குச் சொந்தக்காரர். இவருக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் அதிக ரசிகர்கள் உள்ளனர். அவரின் ஆட்டத்தை ரசிப்பவர்களில் பாதி பேர் வெளிநாட்டினர் தான்.

WWE ராக்குடன் இணைந்த ‘கிங்’ கோலி… ரொனால்டோ, மெஸ்ஸியுடனும் போட்டி!

கிரிக்கெட்டின் தற்போதைய தாதாவாக இருக்கும் கோலி சத்தமில்லாமல் மற்றொருமரு சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். இன்ஸ்டாகிராமில் அதிக பாலோவர்களைக் கொண்ட ஒரே கிரிக்கெட் பிரபலம் என்ற சாதனையைப் படைத்துள்ளார். தற்போதைய நிலவரப்படி அவரைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 100 மில்லியன், அதாவது 10 கோடியைத் தாண்டியிருக்கிறது. இவருக்கு அடுத்தபடியாக 6 கோடி பாலோவர்களுடன் நடிகை பிரியங்கா சோப்ரா உள்ளார்.

WWE ராக்குடன் இணைந்த ‘கிங்’ கோலி… ரொனால்டோ, மெஸ்ஸியுடனும் போட்டி!

உலகிலேயே அதிக பாலோவர்களைக் கொண்டவர்களில் முதலாவதாக கால்பந்து வீரர் ரொனால்டோ இருக்கிறார் (26.5 கோடி). இரண்டாவதாக மெஸ்ஸியும் (18.6 கோடி), மூன்றாவதாக நெய்மாரும் (14.7 கோடி) இருக்கின்றனர். அடுத்தடுத்த இடங்களில் WWE ராக், அமெரிக்கா பாடகி பியோனஸ், பாடலாசிரியர் அரியானா கிராண்டே ஆகியோர் உள்ளனர். இவர்களோடு கிங் கோலி இணைந்துள்ளார்.