விராட் கோலி, அஷ்வின்… ஐ.சி.சி விருதுகள் பரிந்துரையில்! – முழு விபரம்

 

விராட் கோலி, அஷ்வின்… ஐ.சி.சி விருதுகள் பரிந்துரையில்! – முழு விபரம்

உலக கிரிக்கெட் சங்கமான ஐசிசி சார்பாக பல்வேறு விருதுகள் வழங்கப்படும். அப்படி வழங்குவதில் முக்கியமானது பத்தாண்டுகளில் சிறந்த வீரர் என்பதுதான்.

ஏனெனில், ஒரு வீரர் பத்தாண்டுகள் அணியில் நீடிப்பதே பெரிய விஷயம். தொடர்ச்சியாக தம் திறமையை வெளிப்படுத்தி, அணியின் வெற்றிக்கும் அதேநேரம் தமது சாதனைகளையும் படைக்கும் வீரர்களே பத்தாண்டுகள் ஓர் அணியில் நீடிக்க முடியும்.

விராட் கோலி, அஷ்வின்… ஐ.சி.சி விருதுகள் பரிந்துரையில்! – முழு விபரம்

அப்படி நீடித்த இந்திய வீரர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்தளவுக்குத்தான் தொடர்சியாக விளையாடியிருக்கிறார்கள். இப்போது ஐசிசி பத்தாண்டுகளில் சிறந்த வீரர் எனும் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலை வெளியிட்டிருக்கிறது.

விராட் கோலி, அஷ்வின்… ஐ.சி.சி விருதுகள் பரிந்துரையில்! – முழு விபரம்

 ஐசிசியின் பத்தாண்டுகளுக்கான சிறந்த வீரர்களின் ஆண்கள் பிரிவில்

விராட் கோலி (இந்தியா), ரவிச்சந்திரன் அஷ்வின் (இந்தியா) குமார் சங்ககாரா (இலங்கை), கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து), ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா)_, ஜோ ரூட் (இங்கிலாந்து), டி.வில்லியர்ஸ் (தென்னாப்பிரிக்கா) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஐசிசியின் பத்தாண்டுகளுக்கான சிறந்த வீரர்களின் பெண்கள் பிரிவில் இந்திய வீரர்கள் யாரும் இடம்பெற வில்லை.

சுசி பேட்ஸ் (நியூசிலாந்து), மெக் லானிங்(ஆஸ்திரேலியா), சாரா டெய்லர் (இங்கிலாந்து), எல்லிஸ் பெர்ரி (ஆஸ்திரேலியா), ஸ்டாபனி டய்லர் (மேற்கிந்திய தீவு) ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

விராட் கோலி, அஷ்வின்… ஐ.சி.சி விருதுகள் பரிந்துரையில்! – முழு விபரம்

ஐசிசியின் பத்தாண்டுகளுக்கான டெஸ்ட் போட்டியில் ஆடியவர்களில் சிறந்த வீரர்கள் பிரிவில், விராட் கோலி மட்டுமே இந்தியாவைச் சேர்ந்தவர் இடம்பிடித்துள்ளார்.

நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித், இங்கிலாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஜோ ரூட், இலங்கையைச் சேர்ந்த ரங்கன ஹேரத், பாகிஸ்தானைச் சேர்ந்த யஷிர் சஹா ஆகியோரும் உள்ளனர்.

விராட் கோலி, அஷ்வின்… ஐ.சி.சி விருதுகள் பரிந்துரையில்! – முழு விபரம்

ஐசிசியின் பத்தாண்டுகளுக்கான ஒருநாள் போட்டிகளில் ஆடியவர்களில் சிறந்த வீரர்களில் ஆண்கள் பிரிவில், இந்தியாவைச் சேர்ந்த மூவர் இடம்பிடித்துள்ளனர். மகேந்திர சிங் தோனி, விராட் கோலி, ரோஹித் ஷர்மா.

ஐசிசியின் பத்தாண்டுகளுக்கான ஒருநாள் போட்டிகளில் ஆடியவர்களில் சிறந்த வீரர்களில் பெண்கள் பிரிவில், இந்தியாவைச் சேர்ந்த மிதாலி ராஜ் மற்றும் ஜூலன் கோஸ்வாமி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

விராட் கோலி, அஷ்வின்… ஐ.சி.சி விருதுகள் பரிந்துரையில்! – முழு விபரம்

ஐசிசியின் பத்தாண்டுகளுக்கான டி20 போட்டிகளில் ஆடியவர்களில் சிறந்த வீரர்களின் பரிந்துரையில் இந்தியாவைச் சேர்ந்த ரோஹித் ஷர்மா, விராட் கோலி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

அதேபோல, பத்தாண்டுகளுக்கான Spirit ’ கிரிக்கெட்ட விருதுக்கு இந்தியாவின் விராட் கோலி, மகேந்திர சிங் தோனி ஆகியோர் பரிந்துரை பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.