‘நெட்டிசன்கள் வாயைப் பிளக்க வைத்த டிரம்ஸ் அடி’ இணையத்தை கலக்கும் 5 வயது சிறுமி!

 

‘நெட்டிசன்கள் வாயைப் பிளக்க வைத்த டிரம்ஸ் அடி’ இணையத்தை கலக்கும் 5 வயது சிறுமி!

டிரம்ஸ் வாசிக்கும் 5 வயது சிறுமியின் வைரல் வீடியோ இணையதளத்தில் நெட்டிசன்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

குழந்தைகள் செய்யும் சின்ன சின்ன குசும்புத் தனமும் அவ்வப்போது இணையதளத்தில் பகிரப்பட்டு வருகிறது. குறிப்பாக, சிறுவர்கள் செய்யும் அசாத்தியமான செயல்கள் காண்போரை வியப்படையச் செய்கின்றன. அந்த வகையில், 5 வயது சிறுமி ஒருவர் அற்புதமாக டிரம்ஸ் வாசிக்கும் வீடியோ இணையதளத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.

‘நெட்டிசன்கள் வாயைப் பிளக்க வைத்த டிரம்ஸ் அடி’ இணையத்தை கலக்கும் 5 வயது சிறுமி!

அந்த வீடியோவில், ” பின்னணியில் ஒரு பாடலின் இசை ஒலித்துக் கொண்டிருக்கிறது. அந்த பாடலில் வரும் ட்ரம்ஸ் பீட்டை மட்டும் இந்த சிறுமி பிரம்மிக்க வைக்கும் வகையில் வசிக்கிறார். அதுமட்டுல்லாமல், ட்ரம்ஸ் குச்சியை வைத்து கையில் வித்தையும் காட்டுகிறார். இந்த வீடியோ நெட்டிசன்கள் வாயைப் பிளக்க வைத்துள்ளது.

https://twitter.com/fred035schultz/status/1320117107212902400

அந்த வீடியோ இதுவரை சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களால் பார்க்கப்பட்டுள்ளது. அதற்கு, நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் மற்றும் லைக்ஸை தெறிக்கவிட்டு வருகின்றனர்.