காரை ஆக்ரோஷமாக முட்டித்தூக்கும் முரட்டுக் காளை; வைரல் வீடியோ!

 

காரை ஆக்ரோஷமாக முட்டித்தூக்கும் முரட்டுக் காளை; வைரல் வீடியோ!

நின்று கொண்டிருக்கும் கார் ஒன்றை காளை ஒன்று முட்டித்தூக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

சோஷியல் மீடியாக்கள் புழக்கத்தில் வந்ததில் இருந்து அவ்வப்போது பல வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. குறிப்பாக நடனமாடும் நாய், சைகை காட்டும் கொரில்லா, பூனைகளின் கியூட் ரியாக்ஷன் போன்ற விலங்குகளின் குசும்புத்தனமான வீடியோக்களும் கர்ஜிக்கும் சிங்கம், வேட்டையாடும் புலி என அதிரவைக்கும் வீடியோக்களும் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது காளை ஒன்று நின்று கொண்டிருக்கும் காரை ஆக்ரோஷமாக தனது கொம்பால் முட்டித் தூக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

காரை ஆக்ரோஷமாக முட்டித்தூக்கும் முரட்டுக் காளை; வைரல் வீடியோ!

அகமதாபாத்தில் பணியாற்றிவரும் ஐ.ஏ.எஸ் அதிகாரி நிதின் சங்வான், தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். பாட்னாவுக்கு அருகே இருக்கும் ஹாஜிப்பூரில் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாகவும், வீடியோவில் இருக்கும் காருடன் சேர்த்து பல வாகனங்களை அந்த முரட்டுக் காளை சேதப்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.