• February
    22
    Saturday

Main Area

Main



தாயின் அன்பிற்கு ஈடு இணையில்லை என்பதை நிரூபித்த குரங்கு! இணையத்தில் வைரலான வீடியோ 

குட்டியை காப்பாற்றும் குரங்கு
குட்டியை காப்பாற்றும் குரங்கு

தன் குழந்தைக்கு ஒரு ஆபத்து என்றால் எதையும் செய்ய துணியும் தாய்மை. ஐந்து அறிவு  கொண்ட மிருகங்கள் கூட தனது குட்டிக்கு ஒரு ஆபத்து என்றால் தன் உயிரைக் கொடுத்தாவது காப்பாற்றி விடும். அப்படியொரு வீடியோ  இன்று  இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த வீடியோவில் ஒரு  குட்டி  குரங்கு ஒரு வீட்டின் சுவரிலுள்ள பைப்லைனை  பிடித்துக்கொண்டு உயிருக்கு  போராடி  கொண்டிருந்தது. அதைப் பார்த்த தாய்  குரங்கு ஒரே தாவில் அந்த சுவருக்கு தாவி தன் குட்டியை அலேக்காக தூக்கிக்கொண்டு மறு கட்டடத்திற்கு பாய்ந்தது. குட்டியை காக்க தாய் குரங்கு  செய்த செயல், பார்ப்போர் நெஞ்சங்களை நெகிழச் செய்தது.

2018 TopTamilNews. All rights reserved.