‘பேப்பர் கப்பில் டீ குடித்த முதல்வர்’ – டிரெண்டிங் ஆக்கிய இணையவாசிகள்

 

‘பேப்பர் கப்பில் டீ குடித்த முதல்வர்’ – டிரெண்டிங் ஆக்கிய இணையவாசிகள்

தமிழக முதல்வரான எடப்பாடி பழனிசாமி, கட்சியின் சூழ்நிலை காரணமாக அரியணை ஏறினார். ஆட்சி ஒரு சில மாதங்களில் கவிழ்ந்து விடும் என எதிர்க்கட்சிகள் நக்கலாக விமர்சித்தும், தனது அதிரடி நடவடிக்கைகளால் மக்கள் மனதை கவர்ந்து வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறார் எடப்பாடி.

‘பேப்பர் கப்பில் டீ குடித்த முதல்வர்’ – டிரெண்டிங் ஆக்கிய இணையவாசிகள்

கட்சிக்குள் உட்பூசல் இருந்தாலும், அது மக்களை பாதிக்காத வண்ணம் எடப்பாடி திறம்பட ஆட்சியை நடத்தி வருவது வெகுவாக பாராட்டை பெற்றிருக்கிறது. அதோடு கொரோனா பாதிப்பு, புயல் பாதிப்பு என பல பிரச்னைகளை முறியடித்து மக்களை காத்த பெருமையும் இவரது தலைமையிலான அரசுக்கு உண்டு.

‘பேப்பர் கப்பில் டீ குடித்த முதல்வர்’ – டிரெண்டிங் ஆக்கிய இணையவாசிகள்

குறிப்பாக, முதல்வரின் எளிமையான பண்பு அதிமுகவினர் உட்பட அனைத்து தரப்பினர் மத்தியிலும் வியப்பை ஏற்படுத்தும் வகையிலேயே இருந்து வருகிறது. மழை பாதிப்பை பார்வையிட்ட போது தனக்கு தானே குடை பிடித்துச் சென்றது, முகாம்களில் தங்கியிருந்த முதியவர்களை தொட்டு பாசத்துடன் பேசியது, தன்னை கண்டவுடன் அதிகாரிகள் இருக்கையை விட்டு எழுந்தாலும் அவர்களை உட்காரச் சொல்லி பணியை தொடரச் சொல்வது என எடப்பாடியின் இந்த எளிமை குணம், அவரது தரத்தை ஒரு படி உயர்த்தியிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

‘பேப்பர் கப்பில் டீ குடித்த முதல்வர்’ – டிரெண்டிங் ஆக்கிய இணையவாசிகள்

இந்த நிலையில், முதல்வர் பழனிசாமி சாதாரண பேப்பர் கப்பில் டீ குடிப்பது போன்ற புகைப்படம் இணையதளத்தில் வெகுவாக பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்று தெரியவரவில்லை. அது அதிமுக தொண்டர்களின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.

“அந்த உருவம் பாரு எளிமை. அந்த எளிமை தானே அவருக்கு வலிமை” என்றெல்லாம் நெட்டிசன்கள் அவரை புகழ்ந்து வருகின்றனர். வெளியே செல்லும் போதெல்லாம் சாலையோர கடைகளில் டீ குடித்து தனது எளிமையான குணத்தை பலமுறை முதல்வர் பழனிசாமி வெளிப்படுத்தியிருக்கிறார் என்பது நினைவு கூரத்தக்கது.