ஆஸ்துமா நோயாளிகளுக்கு வைரஸ் தொற்று ஏற்படலாம்!

 

ஆஸ்துமா நோயாளிகளுக்கு வைரஸ் தொற்று ஏற்படலாம்!

ஆஸ்துமா… நாள்பட்ட நோய் வகைகளில் முக்கியமானது. ஒருவருக்கு ஆஸ்துமா வந்தால் அதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது என்றாலும் கட்டுக்குள் வைக்க முடியும். ஆஸ்துமா நோயாளிகள் நோயைக் கட்டுப்படுத்த என்னென்ன செய்ய வேண்டும் என்று நுரையீரல் சிறப்பு மருத்துவர் சுந்தர்ராஜன் சொல்வதைக் கேட்போம்.

ஆஸ்துமா நோயாளிகளுக்கு வைரஸ் தொற்று ஏற்படலாம்!மாத்திரை – இன்ஹேலர்:
“ஆஸ்துமா யாருக்கு வேண்டுமானாலும் எந்த வயதில் வேண்டுமானலும் வரலாம். ஒவ்வாமை, காற்று மாசு, வைரஸ் தொற்று மற்றும் குடும்பப் பின்னணி போன்றவையே ஆஸ்துமா வருவதற்கான முக்கியக் காரணங்களாக இருக்கின்றன.

மூச்சுக்குழாய் மற்றும் நுரையீரலில் ஏற்படும் பிரச்சினை என்பதால் நேரடியாக அதற்கு மட்டுமே மருந்து கொடுக்க வேண்டும். எனவேதான் ஆஸ்துமாவுக்கு மாத்திரைகளுக்குப் பதில் இன்ஹேலர் மூலம் மருந்து உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.

ஆஸ்துமாவுக்கான மருந்துகளிலும் எல்லா மருந்துகளையும்போல பக்கவிளைவுகள் இருக்கின்றன என்பதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். மாத்திரை வடிவில் கொடுத்தால் அவற்றை உட்கொள்ளும்போது அவை உடலின் மற்ற உறுப்புகளையும் சென்றடைந்து தேவையில்லாத பாதிப்புகளை ஏற்படுத்தலாம். ஆனால், இன்ஹேலர் அப்படியல்ல. அது நேரடியாக நுரையீரலை சென்றடைவதால் மற்ற பாதிப்புகள் ஏற்படாது.

ஆஸ்துமா நோயாளிகளுக்கு வைரஸ் தொற்று ஏற்படலாம்!நெஞ்சு இறுக்கம்:
ஆஸ்துமா நோயாளிகளை சில அறிகுறிகளைக் கொண்டே அவர்களுக்கு நோய் பாதித்திருக்கிறது என்று உறுதிபடுத்துகிறோம். மூச்சுத்திணறல் எந்த அளவு உள்ளது, அது எந்த அளவுக்கு தீவிரமாக இருக்கிறது என்பதைப் பார்ப்போம். நெஞ்சு இறுக்கமாக இருக்கிறதா, சில நிமிடங்கள் பேசும்போதோ பாடும்போதோ சிக்கல் இருக்கிறதா என்று பார்ப்போம்.

இதுதவிர சம்பந்தப்பட்டவர்களின் குடும்பப் பின்னணியில் யாருக்கும் ஆஸ்துமா தொந்தரவு இருக்கிறதா என்பதுபோன்ற தகவல்களைப் பெற்றே ஆஸ்துமா உறுதி செய்யப்படும். மேலும் தொடர்ந்து எந்தெந்த சூழலில் இந்த அறிகுறிகள் தீவிரமாக இருக்கிறது என்பதைக் கண்காணிப்போம்.

ஆஸ்துமா நோயாளிகளுக்கு வைரஸ் தொற்று ஏற்படலாம்!Inhalerபரிசோதனைகள்:
இரவு அல்லது அதிகாலை வேளையில் அதிக புகையை சுவாசிக்கும்போதோ, செல்லப்பிராணிகளுடன் விளையாடும்போதோ அதிக மன அழுத்தத்துக்கு உள்ளாகும்போதோ மூச்சுத்திணறல், இருமல் போன்ற அறிகுறிகள் தீவிரமாக இருந்தால் ஆஸ்துமா பாதிக்க வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை உறுதிசெய்வோம்.

அடுத்தகட்டமாக நுரையீரல் செயல்திறன் பரிசோதனை செய்வோம். இதுதவிர மேலும் பல பரிசோதனைகளுக்குப் பிறகே ஆஸ்துமாவை உறுதிசெய்வோம். ஆஸ்துமா நோயாளிகளுக்கு வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். குளிர் மற்றும் வெயில் காலங்களில் வைரஸ் தொற்றுகள் வேகமாக பரவும். எனவே அந்த காலகட்டத்தில் நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டும்.

மருந்துகள்:
வைரஸ் தொற்றுக்கான தடுப்பு மருந்துகள் இருக்கின்றன. அவற்றை முறையாக எடுத்துக் கொண்டால் பிரச்சினைகள் வராது. ஒவ்வொருவரின் உடல்நிலையைப் பொறுத்து காலத்துக்கு ஏற்ப மருந்தின் அளவு மாறுபடும் என்பதால் குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை ஆஸ்துமா பரிசோதனை செய்ய வேண்டும். ஆஸ்துமா என்றதும் பயந்துவிடாமல் முறையான பரிசோதனைகள் செய்து கொள்வதுடன் தொடர் சிகிச்சை நோயைக் கட்டுக்குள் வைக்கும்”.