பைனான்சியர் மனைவி மீது கொடூர தாக்குதல் – 2 பெண்கள் உட்பட 5 பேர் கைது

 

பைனான்சியர் மனைவி மீது கொடூர தாக்குதல் – 2 பெண்கள் உட்பட 5 பேர் கைது

திருப்பத்தூர்

வாணியம்பாடியில் நிதி நிறுவன உரிமையாளரின் மனைவியை வீடு புகுந்து தாக்கிய வழக்கில் 2 பெண்கள் உட்பட 5 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெரியபேட்டை பகுதியை சேர்ந்தவர் பாலசுப்ரமணி. நிதி நிறுவன உரிமையாளர். இந்த நிலையில் கடந்த மாதம் வீட்டில் இருந்த பாலசுப்ரமணியின் மனைவி ரஜினியை மர்மநபர்கள் சிலர் பயங்கர ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பியோடினர். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து வாணியம்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் திருப்பத்தூரை சேர்ந்த பிரகாசம் மற்றும் விஷ்ணு ஆகியோரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பால சுப்ரமணியின் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்த சந்திரா மற்றும் சோனியா ஆகியோர், நிதி நிறுவனத்தில் இருந்து பல லட்சம் ரூபாய் பணம் மற்றும் 46 சவரன் நகையை மோசடி செய்ததாகவும், இதனால் அவர்களிடம் பணம் மற்றும் நகைகளை கேட்டு பலாசுப்ரமணி மிரட்டல் விடுத்து வந்ததும் தெரியவந்தது.

பைனான்சியர் மனைவி மீது கொடூர தாக்குதல் – 2 பெண்கள் உட்பட 5 பேர் கைது

இதனால் ஆத்திரமடைந்த சந்திரா, தனது உறவினர்களான பிரகாசம் மற்றும் விஷ்ணு ஆகியோருடன் இணைந்து பாலசுப்ரமணியை கொல்ல திட்டமிட்டு, அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். ஆனால் எதிர்பாராத விதமாக ரஜினி கதவை திறந்ததால், அவரை தாக்கிவிட்டு தப்பியோடியது தெரியவந்தது. இதனை அடுத்து, வழக்கில் தொடர்புடைய சந்திரா, சோனியா மற்றும் அவரது உறவினர் அங்கப்பன் ஆகியோரையும் கைதுசெய்து, 5 பேரையும் நீதிமன்ற காவலில் அடைத்தனர்.