அமெரிக்காவில் வெடித்த வன்முறை : டிரம்பின் இன்ஸ்டாகிராம் கணக்கும் முடக்கம்!

 

அமெரிக்காவில் வெடித்த வன்முறை : டிரம்பின் இன்ஸ்டாகிராம் கணக்கும் முடக்கம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இன்ஸ்டாகிராம் கணக்கு 24 மனி நேரத்துக்கு முடக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வெடித்த வன்முறை : டிரம்பின் இன்ஸ்டாகிராம் கணக்கும் முடக்கம்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்றுள்ளார். இதை தற்போதைய அதிபர் டிரம்ப் ஏற்கமறுத்துள்ளார். ஜோ பைடன் தேர்தலில் முறைகேடு செய்து வெற்றிபெற்றுள்ளதாக அவர் குற்றம் சாட்டி வருகிறார். இதை தொடர்ந்து டிரம்பின் ஆதரவாளர்கள் தலைநகர் வாஷிங்டனில் கண்டன பேரணிகள் நடத்தினர். அதே சமயம் ஜோ பைடன் வெற்றியை தீர்மானிக்கும் வகையில் எல்க்டோரல் காலேஜ் ஓட்டுகளை பரிசீலனை செய்து சான்றிதழ் அளிக்கும் பணி தற்போது தொடங்கியது. இதை தடுக்கும் நோக்கத்துடன் களமிறங்கிய டிரம்ப் ஆதரவாளர்கள், வெள்ளை மாளிகை கட்டடத்திற்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். போராட்டத்தை தடுக்க போலீசார் துப்பாக்கிசூடு நடத்தியதில் பெண் ஒருவர் பலியானார். இதனால் நிலைமை கட்டுக்குள் கொண்டுவர கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டது. இதனால் நிலைமை ஓரளவு கட்டுக்குள் வந்தது.

அமெரிக்காவில் வெடித்த வன்முறை : டிரம்பின் இன்ஸ்டாகிராம் கணக்கும் முடக்கம்!

இதை தொடர்ந்து தேர்தல் மற்றும் வன்முறை தொடர்பாக ஆதாரமற்ற உண்மைகளை டிரம்ப் பதிவிட்டதாக கூறி அவரின் ட்விட்டர் , பேஸ்புக் கணக்குகள் முடக்கப்பட்டன. அத்துடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இன்ஸ்டாகிராம் கணக்கும் 24 மனி நேரத்துக்கு முடக்கப்பட்டுள்ளது. வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக டிரம்பின் ட்விட்டர், ஃபேஸ்புக் கணக்கு 12 மணி நேரம் முடக்கப்பட்டுள்ளதாகவும், அவர் சர்ச்சைபதிவை நீக்காவிட்டால் நிரந்தரமாக அவரின் கணக்கு முடக்கப்படும் என்று ட்விட்டர் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.