நீட், ஜே.இ.இ. தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்! மாணவர்கள் அச்சப்பட வேண்டாம்: தேசிய தேர்வு முகமை இயக்குநர்

 

நீட், ஜே.இ.இ. தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்! மாணவர்கள் அச்சப்பட வேண்டாம்: தேசிய தேர்வு முகமை இயக்குநர்

கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் கல்லூரி செமெஸ்டர் தேர்வுகள் உட்பட பல தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் மாணவர்களின் நலன் கருதி நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும் என மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், தேர்வு எந்த காரணத்தை கொண்டும் ரத்து செய்யப்படாது என தேர்வு முகமை திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. இது தொடர்பான நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளும் இன்று ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டது. கொரோனாவிற்கு இடையே நடைபெறும் இந்த தேர்வு குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் 7 மாநில முதல்வர்கள் ஆலோசனை நடத்தினர். ஆலோசனை முடிவில் நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டுமென மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர 7 மாநில அரசுகள் முடிவெடுத்துள்ளன.

நீட், ஜே.இ.இ. தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்! மாணவர்கள் அச்சப்பட வேண்டாம்: தேசிய தேர்வு முகமை இயக்குநர்

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய தேர்வு முகமை இயக்குநர் வினித் ஜோஷி, “நீட், ஜே.இ.இ. தேர்வுகள் திட்டமிட்டபடி கட்டாயம் நடைபெறும். தேர்வு எழுத வருவதற்கு மாணவர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தேர்வு மையங்கள் தயாராக உள்ளன” எனக் கூறினார்.