இந்து முன்னணி சார்பில் தடையை மீறி வைக்கப்பட்ட விநாயகர் சிலை பறிமுதல்!

 

இந்து முன்னணி சார்பில் தடையை மீறி வைக்கப்பட்ட விநாயகர் சிலை பறிமுதல்!

இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக மக்கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சிலை வைத்து வழிபட்டு வருகின்றனர். கொரோனா பாதிப்பால் கூட்டத்தை தவிர்க்கும் பொருட்டு, பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க கூடாது என்றும் ஊர்வலமாக எடுத்துச் செல்ல கூடாது என்றும் அரசு உத்தரவிட்டது. மேலும், தடையை மீறி சிலை வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தது. அதனால் மக்கள் வீடுகளிலேயே வழிபட்டு வருகின்றனர். இதற்கு பாஜகவும் இந்து முன்னணி கட்சியும் கடும் எதிர்ப்பு தெரிவத்த நிலையிலும், பொது இடங்களில் சிலை வைக்க அரசு அனுமதி வழங்கவில்லை.

இந்து முன்னணி சார்பில் தடையை மீறி வைக்கப்பட்ட விநாயகர் சிலை பறிமுதல்!

இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தடையை மீறி வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் விஷ்வ இந்து பரிஷத் சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளும், கோவை ஆர்.எஸ்.புரம், கந்தராபுரம், ரத்தினபுரி பகுதிகளில் இந்து முன்னணி வைத்த 7 சிலைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், சென்னை வேளச்சேரி தண்டீஸ்வரம் நகரில் பாஜக சார்பில் தடையை மீறி விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்ததால் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.