விழுப்புரம் மாவட்ட கர்ப்பிணி காவலர்களுக்கு சிறப்பு விடுமுறை – எஸ்.பி. ஆணை!

 

விழுப்புரம் மாவட்ட கர்ப்பிணி காவலர்களுக்கு சிறப்பு விடுமுறை –  எஸ்.பி. ஆணை!

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் கர்ப்பிணி காவலர்களுக்கு சிறப்பு விடுமுறை வழங்கி மாவட்ட எஸ்.பி., ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார்.

தமிழகம் முழுவதும் கொரோனா 2ஆம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில், மருத்துவர்கள், போலீசார், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட முன்கள பணியாளர்கள் அதிகளவில் கொரோனாவுக்கு பலியாகி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்ட கர்ப்பிணி காவலர்களுக்கு சிறப்பு விடுமுறை –  எஸ்.பி. ஆணை!

சமீபத்தில் மதுரையை சேர்ந்த 8 மாத கர்ப்பிணியான பெண் மருத்துவர் சண்முகபிரியா, கொரோனா சிகிச்சையில் ஈடுபட்டிருந்தபோது நோய் தாக்குதலுக்கு உள்ளாகி பலியாகினார். இதனையடுத்து, சேலம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி ஊழியர்களுக்கு கொரோனா பணியில் இருந்து விலக்கு அளித்து மருத்துவமனை முதல்வர் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் பணிபுரியும் கர்ப்பிணி பெண் காவலர்களுக்கு, சிறப்பு விடுமுறை வழங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார். கொரோனா தாக்குதலில் இருந்து கர்ப்பிணி காவலர்களை காக்கும் விதமாக மறு உத்தரவு வரும் வரை விடுமுறை வழங்கி அவர் உத்தராவிட்டார். எஸ்.பி.யின் இந்த உத்தரவுக்கு பெண் காவலர்கள் நன்றி தெரிவித்து உள்ளனர்.