விழுப்புரம்: திருமண மண்டபங்களில் திருமணங்கள் நடக்கத் தடை! – போலீஸ் எச்சரிக்கை

 

விழுப்புரம்: திருமண மண்டபங்களில் திருமணங்கள் நடக்கத் தடை! – போலீஸ் எச்சரிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் திருமண மண்டபங்களில் திருமணம் உள்ளிட்ட எந்த ஒரு சுப நிகழ்ச்சியையும் நடத்த போலீஸ் தடை விதித்துள்ளது.
ஊரடங்கு காரணமாக மக்கள் ஒன்று கூடுவது தடுக்கப்பட்டுள்ளது. திருமணம், மரணம் என எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இந்த கட்டுப்பாடுகளை மீறி வசதிபடைத்தவர்கள் சிலர் ஆடம்பரமான முறையில் திருமணங்களை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம்: திருமண மண்டபங்களில் திருமணங்கள் நடக்கத் தடை! – போலீஸ் எச்சரிக்கைவிழுப்புரம் மாவட்டம் திருவாமத்தூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அரசின் உத்தரவை மீறி திருமண நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் நடந்தன. உடன் அங்கு சென்ற போலீசார் திருமண மண்டபத்தை வாடகைக்கு விட்ட அதன் உரிமையாளர் ராஜ்குமாரை கைது செய்தனர். மேலும் மண்டபத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து திருமண மண்டபங்களில் விழாக்கள் நடத்துவது தொடர்பான எச்சரிக்கையை விழுப்புரம் போலீசார் வெளியிட்டுள்ளனர்.

விழுப்புரம்: திருமண மண்டபங்களில் திருமணங்கள் நடக்கத் தடை! – போலீஸ் எச்சரிக்கைஅதில், 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் திருமணம் உள்ளிட்ட எந்த ஒரு நிகழ்ச்சியையும் திருமண மண்டபங்களில் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும், தடையை மீறி நிகழ்ச்சி நடத்த வாடகைக்கு விட்டால் மண்டப உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
அதே நேரத்தில் வீட்டில் அரசு விதிமுறைகளைப் பின்பற்றி திருமணத்தை நடத்தலாம். ஊரடங்கில் தளர்வு வரும் வரை, மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை இந்த தடை தொடரும் என்று எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.