#Viluppuram “திமுகவுக்கு இந்த முறையும் நாமம் தானா?” கருத்துக்கணிப்பு இதோ!

 

#Viluppuram “திமுகவுக்கு இந்த முறையும் நாமம் தானா?”  கருத்துக்கணிப்பு இதோ!

சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் முதல்வர் அரியணைக்கு எடப்பாடி பழனிசாமியும்,ஸ்டாலினும் மல்லுக்கட்டி வருகின்றனர். தற்போதைய சூழலில் திமுக -அதிமுகவுக்கு நேரடிப் போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தலைமையிலான அணியும் ஓரளவு தாக்கத்தை உண்டாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த தேர்தல்களில் விழுப்புரம் தொகுதி

#Viluppuram “திமுகவுக்கு இந்த முறையும் நாமம் தானா?”  கருத்துக்கணிப்பு இதோ!

விழுப்புரம் தொகுதியில் 1991ஆம் ஆண்டு அதிமுக வேட்பாளர் ஜனார்த்தனன் 55 ஆயிரத்து 505 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.1996 ஆம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்ட தெய்வசிகாமணி மாபெரும் வெற்றி பெற்ற அவர் அப்போது பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 74 ஆயிரத்து 891. 2001-ஆம் ஆண்டு திமுக சார்பாக போட்டியிட்ட க. பொன்முடி 65 ஆயிரத்து 693 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து நின்ற பசுபதியை மண்ணை கவ்வ வைத்தார்.

#Viluppuram “திமுகவுக்கு இந்த முறையும் நாமம் தானா?”  கருத்துக்கணிப்பு இதோ!

2006-ஆம் ஆண்டு திமுக சார்பாக போட்டியிட்ட பொன்முடி மீண்டும் மீண்டும் வெற்றி பெற்றார். அப்போது அவர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 72 ஆயிரத்து 462. 2011 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் 90 ஆயிரத்து 304 வாக்குகள் பெற்று மாபெரும் வெற்றி பெற்றார். அதே போல் 2016 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் சிவி சண்முகமே மீண்டும் வெற்றி வாகை சூடினார். அவர் அப்போது பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 81,973.

#Viluppuram “திமுகவுக்கு இந்த முறையும் நாமம் தானா?”  கருத்துக்கணிப்பு இதோ!

கடந்த 30 ஆண்டுகளில் அதிமுக மூன்று முறையும் ,திமுக மூன்று முறையும் விழுப்புரம் தொகுதியில் கைப்பற்றியுள்ளது. திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்றுள்ளார். அதிமுகவை சேர்ந்த அமைச்சர் சண்முகம் தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்றுள்ளார்.

2021 சட்டமன்ற தேர்தல் : திமுக vs அதிமுக

#Viluppuram “திமுகவுக்கு இந்த முறையும் நாமம் தானா?”  கருத்துக்கணிப்பு இதோ!

அதிமுக விழுப்புரம் மாவட்டச் செயலாளராக இருந்த மருத்துவர் ஆர்.லட்சுமணனின் மாவட்டச் செயலாளர் பொறுப்பு சி.வி.சண்முகத்திடம் அளிக்கப்பட்ட நிலையில் அவர் திமுகவில் இணைந்தார். தற்போது ஆர்.லட்சுமணனை விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திமுக இறக்கியுள்ளது. அவரை எதிர்த்து களமிக்கப்பட்டுள்ளவர் அமைச்சர் சி.வி.சண்முகம். 2011, 2016, ஆகிய சட்டமன்ற தேர்தல்களிலும் திமுக வேட்பாளரை மண்ணை கவ்வ வைத்ததால் விழுப்புரத்தில் சி.வி.சண்முகத்தின் கை ஓங்கியிருக்கிறது.

விழுப்புரம் மக்களின் மனநிலை என்ன? டாப் தமிழ் நியூஸ் கள நிலவரம் !

#Viluppuram “திமுகவுக்கு இந்த முறையும் நாமம் தானா?”  கருத்துக்கணிப்பு இதோ!

சட்டமன்ற தேர்தலையொட்டி நமது டாப் தமிழ் நியூஸ் சேனல் தமிழகம் வாரியாக சென்று மக்களின் எண்ண ஓட்டம் என்ன என்பதை கேட்டறிந்து வருகிறோம். அந்த வகையில் விழுப்புரம் தொகுதியில் உள்ள மக்களிடம் உங்கள் வாக்கு யாருக்கு? என்ற கேள்வியை முன்வைத்த போது, அதில் பெரும்பாலான மக்கள் அதிமுக தான் என்று கூறியுள்ளனர். அதே போல் திமுகவுக்கும் ஆதரவு ஆங்காங்கே உள்ளது.

அதேபோல் விழுப்புரம் மக்களின் பெரும்பாலானோரின் கோரிக்கை அங்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தரவேண்டும், சாலை போக்குவரத்தை மேம்படுத்த வேண்டும். அத்துடன் விழுப்புரம் நகராட்சியை மாநகராட்சியாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.விழுப்புரம் தொகுதியை பொறுத்தவரையில் அதிமுகவுக்கு அதிகளவு ஆதரவு உள்ளது. அதற்கு அடுத்தபடியாக திமுகவே உள்ளது. அடுத்தடுத்த இடங்களை நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி மய்யம் பெற்றுள்ளது. அதேபோல் இப்போதுள்ள அதிமுக அரசுக்கு எத்தனை மதிப்பெண் அளிப்பீர்கள் என்ற கேள்விக்கு, அதிகபட்சமாக 10 க்கு 10 என்றும், குறைந்தபட்சமாக 3 என்றும் கூறியுள்ளனர். இந்த ஒட்டுமொத்த கருத்துக் கணிப்புகளைப் பார்க்கையில், ஆளும்கட்சியான அதிமுக விழுப்புரத்தில் ஆட்சியமைக்க வாய்ப்பு உள்ளதையே காட்டுகிறது.