விழுப்புரம் திமுக மத்திய மாவட்ட செயலாளர் நியமனம்!

 

விழுப்புரம் திமுக மத்திய மாவட்ட செயலாளர் நியமனம்!

விழுப்புரம் திமுக மத்திய மாவட்ட செயலாளராக நா.புகழேந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

விழுப்புரம் திமுக மத்திய மாவட்ட செயலாளர் நியமனம்!

திமுக பொதுச்செயலாளராக அண்மையில் மூத்த நிர்வாகியான துரைமுருகன் தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் பொருளாளராக டி.ஆர்.பாலுவும், திமுக துணை பொதுச்செயலாளராக பொன்முடியும், ஆ. ராசாவும் தேர்வாகினர். இதை கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

விழுப்புரம் திமுக மத்திய மாவட்ட செயலாளர் நியமனம்!

இந்நிலையில் விழுப்புரம் திமுக மத்திய மாவட்ட செயலாளராக நா.புகழேந்தி நியமனமிக்கப்படுவதாக கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். மாவட்ட செயலாளராக இருந்த பொன்முடி, திமுக துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதை அடுத்து நா.புகழேந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார் . திமுக விதியின் படி ஒருவருக்கு ஒரு பொறுப்பு என்ற அடிப்படையில் புகழேந்தி நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.