விழுப்புரம் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு மையத்தில், செலவின பார்வையாளர்கள் ஆய்வு!

 

விழுப்புரம் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு மையத்தில், செலவின பார்வையாளர்கள் ஆய்வு!

விழுப்புரம்

விணழுப்புரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 24 மணிநேர தேர்தல் கட்டுப்பாட்டு மையத்தை, தேர்தல் செலவின பார்வையாளர்கள் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவு விவரங்களை கண்காணிக்க, தேர்தல் ஆணையம் சார்பில் ஆசிப் கர்மாலி, அருண்கண்டி தத்தா மற்றும் ராஜேந்திர குமார் ஆகியோர் செலவின பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

விழுப்புரம் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு மையத்தில், செலவின பார்வையாளர்கள் ஆய்வு!

இந்த நிலையில், தேர்தல் பணிக்கான நேற்று விழுப்புரம் வந்தடைந்த 3 பேரும், மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான அண்ணாதுரையை நேரில் சந்த்து ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் 24 மணிநேர தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் வாக்காளர் சேவை மையத்தையும் அவர்கள் பார்வையிட்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் அண்ணாதுரை, விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்களை செலவின பார்வையாளர்களிடம் தெரிவிக்கலாம் என்றும், அவர்களது செல்போன் எண் விவரங்களையும் வெளியிட்டார். இந்த ஆய்வின்போது, விழுப்புரம் மாவட்ட எஸ்.பி., ராதாகிருஷ்ணன் மற்றும் கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி. சிங் ஆகியோர் உடனிருந்தனர்.