darbar
  • January
    29
    Wednesday

Main Area

Main



குடிகாரர்களின் அபராத தொகை மூலம் ஏரியை தூர் வாரிய கிராமம்

Drunkards spend heavily
Drunkards spend heavily

தஞ்சாவூர் ஒரத்தநாடு அடுத்த குலமங்கல கிராமத்தினர் தினமும் அவஸ்தை அனுபவித்து வந்திருக்கின்றனர் ஊர் குடிகாரர்களால். பொறுத்து பொறுத்து பார்த்த கிராம நலச் சங்கத்தை ஆரம்பித்த இளைஞர்களும் பஞ்சாயத்தாரும் ஒரு முடிவு எடுத்தனர். அதன்படி மதுகுடித்துவிட்டு ரகளையில் ஈடுபடுபவர்களின் வீடுகளுக்கு அடுத்த நாள் சென்று அபராதம் வசூலிக்க ஆரம்பித்தனர். டாஸ்மாக் வசூலுக்கு இணையாக இல்லாவிட்டாலும், தினமும் வசூல் குவிய தொடங்கியது. ஆனால் நாளுக்கு நாள் குடிகாரர்களின் சைடிஷ் குறைந்தது, வெகு சீக்கிரத்தில் மதுகுடித்து அலப்பறை செய்ப்வர்களின் எண்ணிக்கையும் குறைந்தது. அதே நேரம் அபராத தொகை வசூல் 5,000ஐ தாண்டியது.
 

Kulamangalam village sets example

அடடா நாய் வித்த காசு குறைக்காதுங்கிற மாதிரி அந்த பணத்தை ஊர் பொது வேலைக்கு பயன்படுத்தினர். இதனை முன்மாதிரியாக கொண்டு ஊரில் பரந்து விரிந்திருந்த 300 ஏக்கர் பரப்பிலான சடையன் ஏரியில் ஆக்கிரமிப்பில் இருந்த 40 ஏக்கரையும் மீட்டனர். மழை நீரை சேமிக்கும் விதமாக ஏரியை தூர்வாரி வருகின்றனர். அரசை எதிர்பார்க்காத கிராம மக்கள், மது குடிப்போருக்கான அபராதம், சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடு வாழ் நண்பர்களிடம் பெற்ற உதவி, கிராமத்தில் வசூல் என 5 லட்சம் ரூபாய்க்கும் மேல் நிதியை திரட்டி, ஏரியை தூர்வாரி வருகின்றனர். குடிகாரர்களின் மூலமும் ஒரு சில நன்மைகள் பிறக்கததான் செய்கிறது.

2018 TopTamilNews. All rights reserved.