• March
    31
    Tuesday

Main Area

Main



இன்றும் பேருந்துகள் இல்லாத தமிழக கிராமம்! தமிழக மக்களின் சாபக்கேடு!

தமிழக கிராமம்
தமிழக கிராமம்

நம் நாடு சுதந்திரம் அடைந்து 73 ஆண்டுகள் ஆன போதிலும், இன்றும் தமிழகத்தில் பேருந்துகள் செல்லாத கிராமங்கள் எல்லாம் இருக்கின்றன என்கிற தகவல் பேரதிர்ச்சியை தந்துள்ளது. இத்தனைக்கும் பேருந்து வசதிகள் இல்லாத அந்த கிராமம் ஏதோவொரு மலை கிராமம் எல்லாம் கிடையாது. நம் தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் திருத்தணி பகுதியில் மீனாட்சிபுரம் என்கிற கிராமத்திற்கு தான் இந்த அவல நிலை!

bus service

சுதந்திரமடைந்து 73 ஆண்டுகள் ஆகியும் இதுவரை இந்த கிராமத்திற்கு பேருந்து வசதிகளை செய்து தராமல் இருந்துள்ளது தமிழக அரசு. இதனால் பேருந்துக்காக தினமும் 4 கிலோ மீட்டர் தூரம் இந்த கிராமத்து மக்கள் நடந்துச் செல்லும் அவல நிலை நெடு நாட்களாக நீடித்து வந்தது.  இந்த அவல நிலைக் குறித்து பலமுறை கிராமத்து மக்கள் அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் ஆட்சிகள் மாறினாலும், புதிது புதிதாக கட்சிகள் முளைத்தாலும், இதுவரையில் எவ்வித முயற்சியும் எடுக்கப்படாமலே இருந்துள்ளது. 

bus

இந்நிலையில் பல கட்ட போராட்டத்திற்கு பின்னர் முதன்முறையாக அந்த கிராமத்துக்கு அரசு பேருந்து இயக்கப்பட்டது இதனால் மகிழ்ச்சி அடைந்த கிராம மக்கள் ஓட்டுநர்கள் நடத்துனர்கள் பொன்னாடை போர்த்தி இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர். ஒரு பக்கம் நகர் முழுவதும் மெட்ரோ ரெயில் திட்டத்தைக் கொண்டு வருகிறோம். சென்னை மாநகரை சிங்கப்பூர் சிட்டியாக மாற்றுகிறோம் என்று பெருமை பேசுகிறோம். இன்னொரு பக்கம் இருக்கும் ஒரு ரோடு போதவில்லை என்று எட்டு வழி சாலை திட்டம் தீட்டி ஆயிரக்கணக்கான மரங்களை வேறோடு வெட்டி சாய்க்கிறோம்... 
அய்யா.. ஆட்சியில் இருப்பவர்களே... ஆட்சிக்கு வரத் துடிப்பவர்களே... எங்கோ தொலைதூரத்தில் இருக்கிற கிராம மக்களும் தான் உங்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்பதை இனியாவது கொஞ்சம் நினைவுல வெச்சுக்கோங்க!

2018 TopTamilNews. All rights reserved.