மயானத்தை சூழ்ந்த வெள்ளநீர் – சடலத்தை சாலையில் வைத்து எரித்த கிராம மக்கள்

 

மயானத்தை சூழ்ந்த வெள்ளநீர் –  சடலத்தை சாலையில் வைத்து எரித்த கிராம மக்கள்

சென்னை

சென்னை பூந்தமல்லி அருகே கனமழையால் மயானத்தை வெள்ள நீர் சூழ்ந்ததால், சடலத்தை சாலையில் வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் குத்தம்பாக்கம் ஊராட்சி இருளபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ஏழுமழை (97 ). இவர் உடல்நலக்குறைவு இன்று காரணமாக உயிரிழந்தார். இதனால், இறுதி சடங்குகளை மேற்கொள்வதற்காக அவரை இருளபாளையம் பகுதியில் உள்ள இடுகாட்டிற்கு கொண்டு சென்றனர்.

மயானத்தை சூழ்ந்த வெள்ளநீர் –  சடலத்தை சாலையில் வைத்து எரித்த கிராம மக்கள்

ஆனால் சமீபத்தில் பெய்த கனமழையால் அந்த பகுதியை சுற்றி உள்ள அரணவாயல் குப்பம் , நேமம் ஏரிகள் முழுமையாக நிரம்பி, தண்ணீர் வெளியேறியதால் இடுகாடு உள்பட பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் சடலத்தை எரிமேடையில் வைத்து எரிக்க முடியாமல், உறவினர்கள் சாலையில் வைத்து இறுதி சடங்கு நடத்தி எரிக்கும் சூழல் ஏற்பட்டது. இதுகுறித்து பேசிய அந்த பகுதிமக்கள் மழைநீரை வடியச் செய்ய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.