`என் மனைவிக்கு கொரோனா இருக்குன்னு ஊரு முழுக்க சொல்லிட்டியே, உன்ன கொன்னுடுவேன்!’- நர்ஸை ஆபாசமாக பேசியவர் கைது

ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வரும் செவிலியரை, ஆபாசமாக திட்டயவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் திருச்சியில் நடந்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகேயுள்ள ஒரத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் தனது கர்ப்பிணி மனைவி பாரதியை அழைத்துக் கொண்டு திருச்சி மாவட்டம், சமயபுரம் காவல் எல்லைக்குட்பட்ட வீ.துறையூர் சுகாதார மையத்திற்குத் பதிவு செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த செவிலியர் சந்தோஷமேரி, கொரோனா டெஸ்ட் எடுக்குமாறு கூறியுள்ளார். இதையடுத்து, கடந்த 23ம் தேதி சண்முகம் தனது மனைவியை அழைத்துக் கொண்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு பாரதிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர்கள் வீடு திரும்பி விட்டனர். இதையடுத்து, சண்முகத்துக்கு மருத்துவமனையில் இருந்து போன் வந்துள்ளது. அப்போது, உங்கள் மனைவி பாரதிக்கு கொரோனா இருப்பதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, 108 ஆம்புலென்ஸ் அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் அவர்கள் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த 29ஆம் தேதி சண்முகம், செவிலியர் சந்தோஷமேரியை செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசியுள்ளார். இதனை கண்டித்து செவிலியர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து, சண்முகம் மீது செவிலியர்கள் சங்கம் சார்பில் ஆட்சியர் மற்றும் சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, திருச்சி எஸ்பி ஜியாவுல் ஹக் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் கரூர் மாவட்டம் பகுதி பாளையம் பகுதியில் தலைமறைவாக இருந்த சண்முகத்தை கைது செய்தனர்.

இது குறித்து கிராமப்புற சுகாதார செவிலியர் நலசங்கத்தின் துணைத்தலைவர் உமா காந்தி கூறுகையில், “பொதுவாகப் பிரசவம் பார்ப்பதற்கு பத்து நாட்களுக்கு முன்பு எல்லா கர்ப்பிணி பெண்களுக்கும் கொரோனா டெஸ்ட் எடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறோம். கொரோனா பாசிடிவ் என்று வருபவர்களுக்குத் தனியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சுகாதார நிலைத்துக்கு வந்த சண்முகத்தின் கர்ப்பிணி மனைவி பாரதி என்பவரை கொரோனா டெஸ்ட் எடுக்குமாறு செவிலியர் சந்தோஷமேரி கூறியிருக்கிறார். அவர்களும் டெஸ்ட் எடுத்த பின்னர் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ளவர்கள் ஆரம்பச் சுகாதார நிலைய செவிலியர் சந்தோஷமேரிக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள் அவர் உடனே, சண்முகத்தை போனில் தொடர்பு கொண்டு, உங்க மனைவிக்கு கொரோனா உறுதியாகியிருக்கிறது. ஆம்புலன்ஸ் அனுப்புகிறோம். வந்திருங்கன்னு சொல்லியிருக்கிறார். அவர்களும் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டனர்.

இந்த நிலையில், குடித்துவிட்டு சண்முகம் தினம் தோறும் செவிலியர் சந்தோஷமேரியை தரக்குறைவாக பேசியுள்ளார். “உன்னால்தான் என் மனைவிக்கு இப்படி ஆகிவிட்டது” என்று ஆபாசமாக திட்யுள்ளார். செவிலியர் சந்தோஷச மேரியும் பொறுத்துப் போயிருக்கிறார். மேலும், மருத்துவமனையில் மருந்து மாத்திரை கொடுக்கவில்லை என்பதற்காக அவருக்கு போன் போட்டு, “என் மனைவிக்கு கொரோனான்னு ஊரு முழுக்க சொல்லிகிட்டு திரியுரியாமே. எல்லாத்தையும் நிப்பாட்டிக்கோ. இல்லன்னா உன்ன அடிச்சே கொன்னுடுவேன்னு” என்று கெட்டவார்த்தைகளால் பேசியிருக்கிறார். ஒரு கட்டத்தில் பொறுக்கமுடியாமல் எங்களிடம் சொன்னார். நாங்களும் மனிதர்கள் தானே எங்களைத் திட்டுவதில் எந்தவிதத்தில் நியாயம். தற்போது அவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது” என்று கூறினார்.

Most Popular

கன்னியாஸ்திரீ பாலியல் வழக்கு… முன்னாள் பிஷப் மீது குற்றச்சாட்டு பதிவு!

கன்னியாஸ்திரீ பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஜலந்தர் முன்னாள் பிஷப் பிராங்கோ முல்லக்கல் மீது கேரள நீதிமன்றம் குற்றச்சாட்டைப் பதிவு செய்தது. பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் கிறிஸ்தவ பிஷப்பாக இருந்தவர் பிராங்கோ முல்லக்கல். இவர்...

தலைமை நீதிபதியை விமர்சித்து ட்வீட்… வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் குற்றவாளி என அறித்தது உச்ச நீதிமன்றம்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளை விமர்சித்து ட்வீட் வெளியிட்டது தொடர்பான வழக்கில் பிரஷாந்த் பூஷன் குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. உச்ச நீதிமன்றம் வழங்கிய பல்வேறு தீர்ப்புகளை விமர்சித்து மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் ட்விட்டரில்...

“எலி மருந்தை சாப்பிட்ட 5 சிறுமிகள்” தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி; ராமநாதபுரத்தில் பரபரப்பு!

கொரோனா பாதிப்பு தமிழகத்தை புரட்டி போட்டு வருகிறது. பல மாதங்களாக பிறப்பிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு மக்களின் வாழ்வாதாரத்தை பெருமளவில் பாதித்துள்ளது. எப்போது இந்த கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்து இயல்பு நிலை திரும்பும் என...

தமிழக அரசுப் பணிகளில் திட்டமிட்டு வட இந்தியர்களை திணிப்பதை கைவிட வேண்டும் : வேல்முருகன் காட்டம்!

ரயில்வே துறை வங்கிகள், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ,உளவுத்துறை, புலனாய்வுத்துறை, தேர்தல் ஆணையம் என தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் வட இந்தியர்களே அதிகம் பணியமர்த்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் ஆந்திரா,...
Do NOT follow this link or you will be banned from the site!