Home தமிழகம் கிராம சபை கூட்டங்களுக்கு தடை : வைகோ கண்டனம்!

கிராம சபை கூட்டங்களுக்கு தடை : வைகோ கண்டனம்!

திமுக முன்னின்று நடத்தும் கிராம சபை கூட்டங்கள் மக்கள் பங்கேற்புடன் சிறப்பாக நடந்து வருவதை பொறுக்க முடியாமல் தமிழக அரசு தடை செய்துள்ளது என்று வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

கிராம சபை கூட்டம் நடத்த தனி சட்டம் உள்ள நிலையில் கிராம சபை தலைவராக மட்டுமே கிராம சபை கூட்டம் கூட்டப்பட வேண்டும். அப்படி இருக்கையில் அரசியல் கட்சிகள் சில கிராமசபை கூட்டங்கள் கூட்டி வருகின்றனர். இதற்கு மாவட்ட ஆட்சியர் அனுமதிக்கக் கூடாது என்றும் மீறி நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசு நேற்று உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 20 தொகுதிகளிலும் கிராமசபை கூட்டங்கள் என்ற பெயரில் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார் இந்த சூழலில் தமிழக அரசின் இந்த அறிவிப்பு திமுகவுக்கு முட்டுக்கட்டை போட்டதாகவே இருக்கிறது.

இந்நிலையில் இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ” திராவிட முன்னேற்றக் கழக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டில் கிராம சபைக் கூட்டங்களை நடத்த வேண்டுகோள் விடுத்து, பல்வேறு மாவட்டங்களில் நடந்து வருகின்றன.இக்கூட்டங்களில் மக்கள் அணி, அணியாக திரண்டு வந்து தங்கள் கோரிக்கைகளை முன் வைக்கின்றனர். தமிழக அரசின் நிர்வாக அலட்சியத்தால் ஊராட்சிப்பணிகளில் தேக்க நிலை ஏற்பட்டு, மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர், சுகாதாரம், வீடு கட்டும் திட்டங்கள், சாலைப் பணிகள் போன்றவை பாதிக்கப்பட்டு உள்ளன.
திமுக முன்னின்று நடத்தும் கிராம சபை கூட்டங்கள் மக்கள் பங்கேற்புடன் சிறப்பாக நடந்து வருவதை பொறுக்க முடியாமல் தமிழக அரசு தடை செய்துள்ளது. இது வன்மையான கண்டனத்துக்கு உரியது.


ஊராட்சி சட்ட விதிகளைக் காரணம் காட்டி, கிராமசபைக் கூட்டங்களை நடத்த தடை போடும் எடப்பாடி பழனிசாமி அரசு, சட்டப்படி ஊராட்சிகளுக்கு வழங்க வேண்டிய மத்திய அரசின் நிதியை பெற்றுத் தரவும், மாநில அரசின் நிதியை வழங்காமல் அலட்சியப் போக்குடன் செயல்படுவதும் நியாயமா?
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கிராமசபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றுவதைத் தடுக்க கடந்த அக்டோபரில் இக்கூட்டங்களை நடத்த தடை போடப்பட்டது. ஆனால் தடைகளைத் தகர்த்து வெற்றிகரமாக கிராம சபை கூட்டங்கள் நடந்தன. இப்பொழுதும் மக்கள் பெருந்திரள் பங்கேற்புடன் கிராமசபைக் கூட்டங்கள் நடப்பதை தடுக்க அதிமுக அரசால் போடப்படும் தடைகள் நொறுங்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

தமிழகத்தில் திடீரென அதிகரித்த கொரோனா பாதிப்பு

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 11 கோடியே 30 லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 25 லட்சத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா...

சரத்குமார் தலைமையில் உருவானது 3 அவது அணி! அதிமுகவுக்கு ஆபத்து!!

அதிமுக கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் அதிமுக கூட்டணியில்தான் உள்ளன என முதல்வர் கூறியிருக்கிறார். ஆனால் இதுவரை அதிமுக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என பிரேமலதா புலம்பிவருகிரார். அதேபோல் அதிமுக...

எடப்பாடி தொகுதியில் முதல்வரை எதிர்த்து போட்டியிடும் இமான் அண்ணாச்சி!

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக -அதிமுக கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். அதேபோல் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, தாமக உள்ளிட்ட...

ஒயின் குடித்தால் ” கன்னாபின்னான்னு துடிக்கும் ஹார்ட்பீட் “… அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!

தினமும் ஒரு கிளாஸ் ஒயின் குடிப்பதால் இதயநோய் பாதிப்பு குறையுமா?ஆல்கஹால் குடிப்பதன் மூலம் உடலுக்கு என்னென்ன பாதிப்புகள் வரும் என்று நாம் அனைவரும் அறிவோம். சமீபத்தில் வெளிவந்த ஆய்வில் நாம்...
TopTamilNews