காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை கிராம சபைக் கூட்டம்!

 

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை கிராம சபைக் கூட்டம்!

தமிழகத்தின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நாளை கிராமசபை கூட்டத்தை நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை கிராம சபைக் கூட்டம்!

இதுகுறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘அக் 2 காந்தி ஜெயந்தி அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தவும், அனைத்து கிராம மக்களும் அறிந்துகொள்ளும் வகையில் அரசின் பல்வேறு செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்படுவதை உறுதி செய்யவேண்டும். அனைத்து மாவட்டங்களில் உள்ள அனைத்து கிராம மக்களும் கலந்து கொள்ள ஏதுவாக இடம் மற்றும் நேரத்தை கிராம மக்களுக்கு அறிவிக்க வேண்டும். கொரோனா காலம் என்பதால் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிப்பது கிராம சபை கூட்டம் நடத்தலாம் எனவும் கொரோனா பரவல் உள்ள பகுதிகளை பொறுத்து கிராம சபை கூட்டமத்தை வேறொரு நாளில் நடத்தி கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை கிராம சபைக் கூட்டம்!

கிராம ஊராட்சிகளில் குடியரசு தினம், சுதந்திர தினம், காந்திஜெயந்தி, உழைப்பாளர் தினத்தன்று ஆண்டுதோறும் கிராமசபை கூட்டம் நடைபெறுவது வழக்கம். இதில், ஊராட்சியின் வரவு செலவுகள், திட்ட பணிகள், பயனாளிகள் தேர்வு செய்து, ஒப்புதல் பெறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.